• Home
  • அரசியல்
  • தமிழிசைக்கு மீண்டும் அமித் ஷா மிரட்டல்..?

தமிழிசைக்கு மீண்டும் அமித் ஷா மிரட்டல்..?

Image

டெல்லியில் அவசர சந்திப்பு

பொதுமேடையில் தமிழிசையை மிகவும் வன்மத்துடன் கண்டித்த அமித் ஷா வீடியோ செம வைரலானது. அப்போது தமிழிசை, ‘தேர்தல் விஷயங்கள் குறித்து சாதாரணமாகத் தான் பேசினார்’ என்று கூறினார்.

அப்போதே, ‘ஒரு பெண் தலைவரை இப்படி அவமானப்படுத்தலாமா?’ என்று அமித் ஷா மீதும், ‘இப்படி மிரட்டலுக்குப் பயந்து வாழ்வதற்கு மானம், சூடு, சொரணை இல்லையா?’ என்று தமிழிசையைப் பார்த்தும் எக்கச்சக்க கேள்வி எழுந்தது.

இதையடுத்து அவசரம் அவசரமாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேரடியாக தமிழிசை வீட்டுக்கு வந்து சமாதானம் பேசிவிட்டுப் போனார். இதையடுத்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலைக்கு ஆதரவாகப் பேசிய திருச்சி சூர்யாவை கட்டம் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து தமிழிசை வெற்றி பெற்றார்.

இதையடுத்து தமிழிசை செளந்தரராஜனின் ஊழல் புகார்களை வரிசையாக வெளியிடப் போகிறேன் என்று திருச்சி சூர்யா ஒரு மிரட்டல் விட்டிருக்கிறார். இதையடுத்து வீடியோ வரப்போகிறதா அல்லது ஆடியோவா என்று தெரியாமல் பா.ஜ.க.வினர் தடுமாறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமித் ஷாவை டெல்லியில் சந்தித்துப் பேசியிருக்கிறார் தமிழிசை. அதற்கு வெளியிடப்பட்டிருக்கும் புகைப்படத்தில் அமித் ஷா ஆணவத்துடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, அசட்டுப் புன்னகையுடன் வழிகிறார் தமிழிசை. ஆக, மீண்டும் ஒரு முறை தனியே ரெய்டு விடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

தமிழிசை மீண்டும் கவர்னர் பதவி எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அவருக்கு நோ சொல்லப்பட்டதுடன் தமிழக பா.ஜ.க.விலும் பதவி எதுவும் கிடைக்கப்போவதில்லை என்கிறார்கள். பரிதாபம். திருச்சி சூர்யா எப்படியும் இது குறித்து தெளிவான பதிவு போடுவார். எனவே வெயிட் பண்ணுவோம்.

Leave a Comment