என்ன செய்தார் சைதை துரைசாமி – 408
மேயர் சைதை துரைசாமிக்கு முன்பிருந்த அத்தனை பேரும் பகுதிநேர மேயராக மட்டுமே செயல்பட்டனர். ஆனால், மேயர் சைதை துரைசாமி மட்டுமே மேயர் பணியை தலையாய கடமையாக நிறைவேற்றினார்.
மேயர் காலத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகளின் எண்ணிக்கை இன்றும் மாநகராட்சி பதிவுகளில் இருக்கின்றன. இது ஒரு வரலாற்று அதிசயம் என்றே சொல்லும் அளவுக்கு பணிகள் முடிப்பதில் மேயர் சைதை துரைசாமி சாதனை படைத்திருக்கிறார்.
மேயர் சைதை துரைசாமிக்கு முந்தைய காலகட்டத்தில் அதாவது 1996 – 2001 காலகட்டத்தில் 8,328 பணிகள் நடந்தேறின. இதற்கடுத்த காலகட்டத்தில் அதாவது 2006 – 2011 காலகட்டத்தில் 9,576 பணிகள் நடந்தேறின.
ஆனால், மேயர் சைதை துரைசாமியின் காலத்தில் அதாவது 2011 முதல் 2016 வரை நடந்தேறிய பணிகள் எவ்வளவு தெரியுமா..? நினைத்துப் பார்த்தாலே மலைக்க வைக்க சைதை துரைசாமி 5 ஆண்டுகளில் செய்துமுடித்த பணிகளின் எண்ணிக்கை 3,02,878 ஆகும்
மேயர் சைதை துரைசாமிக்கு முன்பிருந்த முன்பிருந்த இரண்டு மேயர்கள் அதாவது 10 ஆண்டுகளில் இருவரும் சேர்ந்து 17,904 பணிகள் மட்டுமே செய்திருந்தனர். ஆனால், மேயர் சைதை துரைசாமியோ 3,02,878 பணிகள் முடித்தார்.
இந்த எண்ணிக்கை இந்தியாவில் எந்த மாநகராட்சியிலும், எந்த மேயராலும் செய்ய முடியாத சாதனையாகும். மாநகராட்சி மேம்பாட்டுப் பணிகளுக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்து, அந்தந்தத் திட்டத்தின் அவசியத்தைச் சொல்லி, அதன் முக்கியத்துவத்தைச் சொல்லி, நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு நிதியை அரசிடம் பெற்று, மக்கள் நலனுக்காகவும், மாநகராட்சி வளர்ச்சிக்காகவும் செலவு செய்திருக்கிறார்.
அதனாலே மேயர் சைதை துரைசாமியை செயல் மேயர் என்று மாநகராட்சி அதிகாரிகள் இன்றும் புகழ்கிறார்கள்.
- நாளை பார்க்கலாம்.