அல்லு அர்ஜூன் கைதில் அரசியல் விளையாட்டு..?

Image

முதல்வர் இப்படி சொல்கிறாரே

கலைஞர்களுக்கு தெலுங்கானா அரசில் பாதுகாப்பு இல்லை என்று அல்லு அர்ஜூன் கைது விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். இது திட்டமிட்ட நடவடிக்கை, சில நாட்களாவது சிறையில் அவரை அடைக்க வேண்டும் என்பதற்காக வெள்ளியன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்துகிறார்கள்.

அதற்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த், ‘’அந்த சம்பவத்தில் ஒரு பெண் உயிர் இழந்துருக்கிறார். அவர் மகன் 11 நாளா கோமாவில் இருக்கிறான். மீண்டு வந்து அம்மா எங்கே என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்?. இது குறித்தெல்லாம் எந்த கேள்வியும் எழுப்பாமல் ஒரு நடிகர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ன நியாயம்?’’ என்று கேட்டிருக்கிறார்.

புஷ்பா 2 படத்தில் காட்டப்படும் அரசியல் தெலுங்கானா அரசியலை குறிவைத்து எடுக்கப்பட்டதாக ஆளும் ஆட்சி கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனாலே, உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய பிறகும் அல்லு அர்ஜூன் திட்டமிட்டு ஒரு நாள் இரவு முழுக்க சிறையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்பதால் தரையில் படுத்துத் தூங்கினார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

தேவை இல்லாமல் ஒரு எதிரியை காங்கிரஸ் உருவாக்கிவிட்டது, வரும் தேர்தலில் அதன் பலனை அனுபவிப்பார்கள் என்று அல்லு அர்ஜூன் ரசிகர்கள் கொதிக்கிறார்கள்.

Leave a Comment