என்ன செய்தார் சைதை துரைசாமி – 160
மேயராக சைதை துரைசாமி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த காரணத்தால் மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் உயர்ந்தது மட்டுமின்றி மக்களிடமும் மதிப்பு உயரத் தொடங்கியது. தனியார் பள்ளிகளுடன் போட்டியிட்டுப் படிக்கும் அளவுக்கு மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார்.
பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி தேவைகளை நிறைவேற்றவும் செய்தார். மேயர் சைதை துரைசாமி காட்டிய அக்கறைக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் அவரது காலத்திலேயே பலன் கிடைக்கத் தொடங்கியது.
சைதை துரைசாமி மேயராக வருவதற்கு முன்பு 10ம் வகுப்புத் தேர்வுகளில் 12 பள்ளிகளும் 12ம் வகுப்புத் தேர்வில் 5 மாநகராட்சிப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றது சாதனையாக இருந்தது. மேயராக சைதை துரைசாமி எடுத்துக்கொண்ட அக்கறை காரணமாக அவரது காலத்திலேயே 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 22 பள்ளிகள் 100% வெற்றி என்ற சாதனை படைத்தன.
இந்த வெற்றியைக் கண்டு சைதை துரைசாமி ரொம்பவே பெருமைப்பட்டார். 100% வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு வளர்ச்சி நிதியாக 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கி பெருமப்படுத்தினார். நிறைய மாநகராட்சிப் பள்ளியில் 100% வெற்றி என்ற செய்தி மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்ற 2011ம் ஆண்டிலிருந்து மாநகராட்சிப் பள்ளிகளின் வெற்றி சதவீதத்தை இந்த பட்டியலில் பார்த்தாலே அந்த வித்தியாசத்தை உணர முடியும்.
கல்வி ஆண்டு | 10-ம் வகுப்பு தேர்வு % | +2 வகுப்பு தேர்வு % |
1996-1997 | 58 | 69 |
1997-1998 | 58 | 76 |
1998-1999 | 53 | 74 |
1999-2000 | 49 | 70 |
2000-2001 | 55 | 72 |
2001-2002 | 60 | 73 |
2002-2003 | 68 | 64 |
2003-2004 | 67 | 70 |
2004-2005 | 65.1 | 73.5 |
2005-2006 | 76.2 | 70.7 |
2006-2007 | 79.5 | 81.8 |
2007-2008 | 78.9 | 81 |
2008-2009 | 82.6 | 78.1 |
2009-2010 | 85.3 | 84.8 |
2010-2011 | 86.26 | 86.41 |
2011-2012 | 86.94 | 84.81 |
2012-2013 | 91.47 | 85.53 |
2013-2014 | 90.74 | 88.98 |
2014-2015 | 92.15 | 85.3 |
2015-2016 | 95 | 86.21 |
- நாளை பார்க்கலாம்.