சென்னையில் அ.தி.மு.க.வுக்குக் கிடைத்த இமாலய வெற்றி

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 106

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்று சைதை துரைசாமியை ஜெயலலிதா நன்கு அறிவார். ஆனாலும், ‘புரட்சித்தலைவி அம்மா இலவச திருமண மண்டபம்’ திறப்பு விழா சமயத்தில் தான் மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கையும் அவர் செய்துவரும் மக்கள் சேவைகள் குறித்தும் முழுமையாக அறிந்துகொண்டார்.

அந்த காரணத்தாலே 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், கொளத்தூர் தொகுதியில் இன்றைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து நிறுத்தினார் புரட்சித்தலைவி ஜெயலலிதா. அந்த தேர்தலில் நடந்த முறைகேடுகளால் மிகவும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் சைதை துரைசாமி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

கொளத்தூர் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்ட சைதை துரைசாமி, மேயர் தேர்தலில் அதே கொளத்தூர் தொகுதியில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பதிலிருந்தே உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

அந்த மேயர் தேர்தலில் 31 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தோல்வி அடைந்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தோல்வி அடைந்த 31 வார்டுகளிலும் கூட சைதை துரைசாமிக்கு மா.சுப்பிரமணியனை விட கூடுதல் வாக்குகள் கிடைத்திருந்தன. ஒட்டுமொத்தமாக சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் சேர்ந்து 1.69 லட்சம் வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்றிருந்தார்கள். ஆனால் 5.19 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று சாதனை படைத்திருந்தார் சைதை துரைசாமி.

அது வரையிலும் ஒட்டுமொத்த சென்னையையும் அ.தி.மு.க. வென்றதில்லை. அந்த வரலாற்றை இந்த தேர்தலில் மாற்றிக் காட்டினார் சைதை துரைசாமி. அவர் மீது சென்னை மக்கள் எத்தனை அழுத்தமான நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கிறார்கள் என்பதையே இந்த இமாலய வெற்றி சுட்டிக் காட்டுகிறது. இந்த வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த வெற்றிக்கு அங்கீகாரம் கொடுப்பதற்காகவே, அன்றைய முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா, மேயர் பதவியேற்பு விழாவில் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஏனென்றால், இதுபோன்ற எந்த விழாக்களிலும் ஜெயலலிதா கலந்துகொண்டதே இல்லை என்பதிலிருந்தே சைதை துரைசாமி பெற்ற வெற்றிக்கு அங்கீகாரம் கொடுத்து, அவரை பெருமைப்படுத்தினார். 

–      நாளை பார்க்கலாம்

Leave a Comment