இயக்குனர் பேரரசு
சினிமாவில் நல்லது கெட்டது எல்லாமே கிடைக்கும். சாப்பாடு மட்டுமல்ல தீய பழக்கங்களும் கூடா நட்புகளும் தேடி வரும். விழிப்பாக கெட்ட சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். சிறிய பலவீனத்தால் வீழ்ச்சி அடைந்தவர்கள் நிறைய பேர்.
நம் வேலைகளை நாமே செய்வது கூட உடற்பயிற்சி போலத்தான். ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளைச் செய்தாலே போதும் வேறு உடற்பயிற்சி தேவையில்லை என்று நினைக்கிறேன். அதனால் என் எளிய வேலைகளை நானே செய்வேன். இருந்த இடத்திலிருந்து எழாமல் யாரிடமும் வேலை வாங்குவதில்லை.
உடல் நலனில் மனதிற்கும் இடம் உண்டு. கவலைகளுக்கு மனதில் இடம் கொடுக்கக் கூடாது. எதையும் பெரிதுபடுத்தக் கூடாது. மனசு சோர்ந்தால் உடல் நலனும் கெட்டுவிடும். நிறைய பேர் சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி உடம்பைக் கெடுத்துக் கொள்கிறார்கள். மனதைக் கவலையில் ஆழ்த்தினால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். சுறுசுறுப்பு போய்விடும் .செயல்பாடுகள் மங்கி விடும். கவலையில் விழுந்தவர்கள் உடலைக் கவனிக்க மாட்டார்கள், உடற்பயிற்சி செய்ய மாட்டார்கள். நடை தளர்ந்து விடும் தூக்கத்தைக் குறைத்து நோயில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே இதில் நான் கவனமாக இருப்பேன்.
- முழு பேட்டி ஞானகுரு யாக்கை இதழில் விரைவில்..
- இன்னும் நிறைய நிறையப் படிக்கக் காத்திருங்கள்







