ஜெயலலிதாவிடம் வலியுறுத்தி நடவடிக்கை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 212

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான இணைப்பு சாலையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றால், மீனவ மக்களுக்கு முதலில் குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். இதற்காக குடிசை மாற்று வாரியத்திடம் இருந்து இடங்களைப் பெற வேண்டியிருந்தது.

இதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசினார். தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் முதல்வர் ஜெயலலிதா அகியோரை மீண்டும் மீண்டும் சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. நீண்ட காலமாக இந்த சாலை கவனிக்கப்படாமல் இருக்கிறது என்பதையும் முக்கியமான வி.ஐ.பி.கள் பலரும் பயன்படுத்தும் இந்த சாலையை சீர்படுத்த வேண்டியது முக்கியம் என்பதை எல்லாம் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லியே திட்டத்தை நிறைவேற்றினார் மேயர் சைதை துரைசாமி.

பொதுவாகவே இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் காலம் கடத்துவது வழக்கம். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் சந்தித்து அவ்வப்போது மேயர் சைதை துரைசாமி பேசி அப்டேட் கொடுத்துவந்த காரணத்தால் எல்லா பணிகளையும் ஒருங்கிணைத்து நடத்தினார். அதேபோன்று காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கத்தின் இடது பக்கத்தில் இருந்து தலைமைச் செயலகம் வரையிலான இடங்கள் பொதுப்பணித் துறை வசம் இருந்தன. இந்த இடத்தையும் சென்னை மாநகராட்சிக்குக் கேட்டு வாங்கி சீரமைப்பு நடவடிக்கை மேற்கொண்டார் மேயர் சைதை துரைசாமி.

பட்டினப்பாக்கம் இணைப்பு சாலை, காமராஜர் சாலை இடப்பக்க சீரமைப்பு போன்ற திட்டங்களை எல்லாம் மேயர் சைதை துரைசாமி தானே முன்வந்து எடுத்து செய்த பணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், இந்த பணிகளை எல்லாம் இழுத்துப்போட்டுச் செய்வது மேயரின் பணியே அல்ல. ஆனால், தான் செய்வது காலத்தை மீறி நின்று மக்களுக்குப் பயன் தர வேண்டும் என்பதாலே முழு கவனம் எடுத்து இந்த இரண்டு திட்டங்களையும் நிறைவேற்றிக் காட்டினார். இவை இரண்டும் இன்றும் சைதை துரைசாமியின் சாதனையை சொல்லிவருகின்றன.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment