மனிதர்கள் சேர்ப்பதைவிட பணத்தை சேருங்கள்.

பணமே மந்திரம்

கடவுளைப் பார்க்கப் போனாலும் பணம் உள்ளவருக்கே முதல் மரியாதை கிடைக்கும். அதனால் பணமே வாழ்க்கைக்கு முதன்மைத் தேவை.

அதேநேரம், பணம் இல்லாதவர்கள் பேசுவதைக் கேளுங்கள். ‘’நான் நிறைய மனிதர்களை சம்பாதித்திருக்கிறேன், நல்லவன் என்று பேர் வாங்கியிருக்கிறேன்’’ என்று சொல்வார்கள்.

இப்படி பேசுவது கேட்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், மனிதர்கள் வட்டத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது. எனவே, ஒவ்வொரு மனிதரும் ஓரளவு பணம் சேமிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கடைக்குச் சென்றாலும், கோயிலுக்குச் சென்றாலும், மருத்துவமனைக்குச் சென்றாலும் பணக்காரனுக்குத்தான் மரியாதை. அதனால் பணத்தின் மீது நம்பிக்கை வைப்பது நல்லது.

அதேநேரம், பணம் மட்டும் வாழ்க்கைக்குப் போதாது என்பதும் உண்மை. ஓரளவு பணம் வந்தபிறகு அன்பும், அரவணைப்பும் உருவாக்க வேண்டும். பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் பணத்தைத் தாண்டியும் அன்பு செலுத்த வேண்டும். அந்த அன்புதான், வாழ்க்கைக்கு துணையாக இருக்கும்.

ஒரு கட்டத்தில் பணத்தின் இருக்கும் நம்பிக்கையை, உறவுக்கு மாற்றத் தெரிய வேண்டும். ஆம், வெறுமனே பணத்தை மட்டும் வைத்து வாழ முடியாது. அதேநேரம், வெறும் உறவுகளைக் கொண்டும் வாழ்ந்துஇட முடியாது.

அதனால், ஒருபோதும் பணத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்.  

Leave a Comment