• Home
  • சக்சஸ்
  • சிறந்த நிர்வாகத்துக்கு ஒரு குட்டிக் கதை

சிறந்த நிர்வாகத்துக்கு ஒரு குட்டிக் கதை

Image

மேன் மேனேஜ்மென்ட்

சரியான பணிக்கு சரியான நபரை நியமனம் செய்துவிட்டால், அந்த வேலை சிறப்பாக முடிந்துவிடும் என்பதுதான் நிர்வாகத்தின் முக்கியமான பாடம். இதற்கு உதாரணமாக ஒரு குட்டிக் கதை.

தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் சிக்கி பெரிய நஷ்டம் அடைந்திருக்கும் நிறுவனத்தின் தலைவர் மிகவும் ரிலாக்ஸ்டாக ஹோட்டலில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அதை தற்செயலாக பார்த்த போட்டி நிறுவன அதிபர் ஆச்சர்யத்துடன் அவரிடம் பேசவந்தார்.

என்னுடைய நிறுவனம் நல்ல லாபத்தில் இயங்குகிறது. ஆனாலும் தொடர்ந்து லாபம் ஈட்டவேண்டும் என்பதற்காக கடுமையாக நான் உழைக்கிறேன். ஆனால் உங்கள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கும்போது உங்களால் எப்படி இத்தனை  ஓய்வாக, சந்தோஷமாக இருக்கமுடிகிறது என்று கேட்டார்.

பத்து லட்ச ரூபாய் சம்பளத்தில் சிஇஓ பதவிக்கு  ஒருவரை புதிதாக  நியமனம் செய்திருக்கிறேன். இனிமேல் நிறுவனத்தையும் நிர்வாகத்தையும் அவர் பார்த்துக்கொள்வார் என்பதால் நான் நிம்மதியாக, ஓய்வாக இருக்கிறேன் என்று பதில் சொன்னார்.

ஏற்கெனவே உங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கவே தடுமாறிக்கொண்டு இருக்கிறீர்கள், இப்போது 10 லட்ச ரூபாய்க்கு புதிதாக ஒருவரை வேலைக்கு சேர்த்தால், அவருடைய சம்பளத்துக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.

அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும், எல்லோருக்கும் எப்படி சம்பளம் போடவேண்டும், நிறுவனத்தை எப்படி லாபகரமாக நடத்தவேண்டும் என்பதெல்லாம் இனிமேல் புதிய சிஇஓ-வின் கவலை. அதனால் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்று ஜாலியாக பதில் சொன்னாராம்.

இது உண்மையில் நல்ல நிர்வாகத்திறனுக்கு எடுத்துக்காட்டான கதை. அவ்வப்போது தலைமைக்கு புதியவரை நியமனம் செய்வது புத்திசாலித்தனமான அணுகுமுறை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் புதியவர் தங்கள் திறனை காட்டுவதற்காக கூடுதல் உழைப்பு கொடுப்பார்கள், அதனால் நிர்வாகம் நல்லபடியாக நடப்பதற்கு வாய்ப்பு உண்டு.

Leave a Comment