என்ன செய்தார் சைதை துரைசாமி – 334
முறைகேடுகளின் மொத்த உருவமாக இருந்த சமூகநலக் கூடத்தில் மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த ஆன்லைன் புக்கிங் வசதி மிகப்பெரும் புரட்சியைக் கொண்டுவந்தது. இத்தனை ஆண்டு காலமும் சமூகநலக்கூடத்தைக் கையில் வைத்துக்கொண்டு கொள்ளை அடித்துவந்த கும்பல்களின் தில்லுமுல்லு முடித்து வைக்கப்பட்டது. மாநகராட்சி வரலாற்றில் இப்படி ஒரு சாதனையை யாரும் செய்தது இல்லை. அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதற்கு இடையூறாக இருந்த இடைத் தரகர்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டனர்.
மேயர் சைதை துரைசாமி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அப்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் சமூகநலக் கூடங்களை யாருமே தவறாகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாற்றம் உருவானது. எந்த இடையூறும் இல்லாமல் திருமண மண்டபங்கள் கிடைப்பதை அறிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
சமூகநலக் கூடத்தில் ஆய்வுகள் மேற்கொண்ட நேரத்தில் மேலும் சில குறைகளும் மேயர் சைதை துரைசாமியின் கண்களுக்குத் தெரியவந்தது. பொதுவாக விழா நடத்துபவர்கள், அந்த இடம் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பான ஒன்று. ஆனால், பெரும்பாலான சமூகநலக் கூடங்கள் பாழடைந்த மண்டபம் போன்றே காட்சியளித்தன. நீண்ட நாட்களாக பராமரிப்பு செய்யப்படாமலும், வெள்ளை அடிக்கப்படாமலும் இருக்கப்படுவதை அறிந்தார்.
உடனடியாக அனைத்து சமூகநலக்கூடங்களையும் புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். ஏழைகளும் அழகான அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் விழா கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பாராத மக்கள் ஆர்வமாக விழா நடத்துவதற்கு முன்வந்தனர். அதோடு, யாரும் எதிர்பாராத ஒரு முக்கியமான வசதியும் செய்து கொடுத்தார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.