உயர்நிலைப் பள்ளியிலும் மாபெரும் சாதனை

காமராஜர் நினைவலைகள் – 20

பள்ளிக் கூடமில்லாத கிராமங்களே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்று பெருந்தலைவர் காமராஜர் கருதினார். தமிழ்நாட்டில் முன்னூறும் அதற்கும் மேலும் மக்கள் தொகையுள்ள எல்லாக் கிராமங்களிலும், ஒரு மைல் சுற்றளவிற்குள் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார் காமராஜர்.

18 லட்சத்து 50 ஆயிரம் சிறுவர் சிறுமிகள் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய தமிழகத்தில் அந்த நிலைமையை மாற்றி 34 லட்சம் பிள்ளைகள் படிக்கும் வாய்ப்பினைக் காமராஜர் உண்டாக்கினார்.

பள்ளிச் சீரமைப்புத் திட்டத்தைக் கொண்டு வந்து காமராஜர் அதை அமுல்படுத்தினார். அவர் தொடங்கி வைத்த பள்ளிச் சீரமைப்புத் திட்டத்தின் பயனாகப் பள்ளிகளுக்குப் பொதுமக்கள் நன்கொடையாக அளித்த பொருள்களின் மதிப்பு ரூபாய் 7 கோடியாக வளர்ந்தது.

471 உயர்நிலைப்பள்ளிகளே இருந்த தமிழ்நாட்டில் 1361 உயர்நிலைப் பள்ளிகளை உண்டாக்கினார் காமராஜர். கல்லூரிகளின் எண்ணிக்கையோ 28 ஆக இருந்தது. அவைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் 50க்கு மேலாக உயர்ந்தன. 6 பயிற்சிக் கல்லூரிகள் இருந்த தமழ்நாட்டில் 17 பயிற்சிக் கல்லூரிகளாக ஆக்கினார் காமராஜர். மேலும் 3 உடற்பயிற்சிக் கல்லூரிகளைத் தோற்றுவித்தவரும் காமராஜர்தான்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment