என்ன செய்தார் சைதை துரைசாமி – 316
மக்கள் நன்மைக்கு புதுப்புது திட்டங்கள் தீட்டுவதற்கு மேயர் துரைசாமி மிகுந்த ஆர்வம் காட்டினார். அதேநேரம், தற்போதைய திட்டங்கள் மக்களுக்கு சிறப்பான பயன் அளிக்கிறதா என்பதை அறிவதற்கும் முன்னுரிமை கொடுத்தார். அதன் அடிப்படையில் தான் குப்பை அகற்றுவதில் இருக்கும் அத்தனை பிரச்னைகளையும் சிக்கல்களையும் ஒவ்வொன்றாக தீர்க்கும் வகையில் செயல்பட்டார்.
பகல் நேரங்களில் குப்பை அள்ளும் காம்பேக்டர் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்களுக்கு நிறைய அசெளகர்யம் ஏற்படுகிறது என்பதை அறிந்து, அதனை தீர்ப்பதற்கு இரவு நேரப் பணியை மேயர் சைதை துரைசாமி அறிமுகம் செய்தார். முக்கியமான சாலைகளில் எல்லாம் இரவில் குப்பைகள் அள்ளப்பட்டதால், பகலில் குப்பை வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து தொந்தரவுகள் குறைந்தன.
துப்புரவு ஊழியர்களிடம் அவ்வப்போது மேயர் சைதை துரைசாமி நேரடியாகப் பேசி அவர்களுடைய குறைகளை அறிந்து நிறைவேற்றி வந்தார். அதோடு, குப்பை அகற்றுவதற்குத் தேவையான உபகரணங்கள், குப்பைத்தொட்டிகள், வாகனங்கள் போதுமான அளவில் இருக்கிறதா என்பது துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் கேட்டு அறிவார். குறைகள் இருப்பது அறிய வந்தால், மின்னல் வேகத்தில் அந்த பிரச்னைகள் மேயர் சைதை துரைசாமியால் தீர்த்துவைக்கப்பட்டன.
இந்த நேரத்தில் துப்புரவு ஆய்வாளர்களிடம் மேயர் சைதை துரைசாமி கேட்ட ஒரு கேள்வி, அங்கிருந்த அத்தனை பேரையும் அசரடித்தது. இந்த கேள்வி மாமன்றம் முழுக்கவே எதிரொலித்தது. இப்படி எல்லாம் கேள்வி கேட்பார்களா… இதெல்லாம் சாத்தியமில்லை என்பது புரியாதா, நிஜமாகக் கேட்கிறாரா அல்லது கிண்டல் செய்கிறாரா என்று பலரும் மேயர் சைதை துரைசாமியின் கேள்வி குறித்து விவாதித்தார்கள்.
அது என்ன கேள்வி தெரியுமா..?
குப்பைத் தொட்டியை எத்தனை நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்கிறீர்கள்..? தண்ணீர் ஊற்றி நன்றாகக் கழுவப்படுகிறதா? என்பது தான் மேயர் சைதை துரைசாமி எழுப்பிய கேள்வி.
- நாளை பார்க்கலாம்.