சீன அதிபர் வழங்கிய பிரமாண்ட விருந்து

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 381

சீனாவின் பீஜிங் நகரில் பாரதப்பிரதமர் மற்றும் சீன அதிபர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரலாற்று நிகழ்வில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்கக்கூடாது என்று முட்டுக்கட்டை போடுவதற்கு அவரது அரசியல் எதிரிகள் எத்தனையோ தடைகள் விதித்தார்கள். ஆனால், எதிரிகளின் முயற்சிகளை எல்லாம் மேயர் சைதை துரைசாமி வெற்றிகரமாக முறியடித்தார்.

மேயர் சைதை துரைசாமி நடத்திவரும் மனிதநேயம் அறக்கட்டளையில் பயிற்சி எடுத்த மாணவர்கள் இந்தியா முழுக்கவே பணியில் இருக்கிறார்கள். பொதுவாக மனிதநேயம் மாணவர்களை மேயர் சைதை துரைசாமி எந்த ஒரு தகவலுக்காகவும் தொடர்புகொள்வதில்லை, உதவி கேட்பதும் இல்லை. ஆனால், மேயர் சைதை துரைசாமியின் சீன பயணத்துக்குச் சிக்கல் என்பது அதிகாரபூர்வமாக வெளியே தெரியவந்தது. அதனால், மனிதநேயத்தில் படித்து முடித்த ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ். மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து உதவிகள் செய்து மேயர் சைதை துரைசாமியின் கடைசி நேரப் பயணத்தை சாத்தியமாக்கினார்கள்.

இதையடுத்தே சீனாவின் பீஜிங் நகரில் கிரேட் ஹால் ஆஃப் பீப்பிள் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் சி ஜின்பின் ஆகியோர் முன்னிலையில் பெருநகர சென்னை மாநகர மேயர் சார்பில் மேயர் சைதை துரைசாமியும் சொங்சிங் மாநகராட்சி மேயரும் கையெழுத்து போட்டனர். அந்த பிரமாண்ட ஹாலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிமுக்கிய நிகழ்வு அரங்கேறியது.

தான் பெரிதும் மதிக்கும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் சி ஜின்பின் ஆகியோர் முன்பு அமர்ந்து கையெழுத்திட்டு, அந்த ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். நட்பு நகர ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி முடிந்ததும், இந்தியாவில் இருந்து வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு சீன அதிபர் அளித்த பிரமாண்டமான விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாநாட்டின் அமர்வுக்குப் பிறகு யோகா, தாய்ச்சி, சீன தற்காப்புக்கலை பயிற்சியை பார்வையிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை மீது சீனர்களுக்கு இருக்கும் ஈடுபாடும், நேர்த்தியும் மேயர் சைதை துரைசாமியை வியக்க வைத்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment