மேயர் நிதியில் ஒரு சாதனை

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 390

முதல்வராக ஜெயலலிதா இருந்த தருணங்களில் அவரை நேரில் சந்தித்து அலுவல் விஷயமாகப் பேசுவதற்கு அதிகாரிகள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் அச்சப்படுவார்கள். ஏனென்றால், ஜெயலலிதா கேட்கும் கேள்விகள், எழுப்பும் சந்தேகங்கள் மிகவும் வலுவாக இருக்கும். இத்தகைய சூழலில் தான் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மேயர் நிதியை உயர்த்திக் கேட்டார் பெருநகர சென்னை மேயர் சைதை துரைசாமி.

சைதை துரைசாமி தனிப்பட்ட முறையில் எந்த கோரிக்கையும் வைக்க மாட்டார் என்பதும், அரசு பணத்தில் ஆதாயம் தேடுபவர் இல்லை என்பதும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அதனாலே மேயர் சைதை துரைசாமி வைத்த கோரிக்கையை அக்கறையுடன் கேட்டார். மேயர் சைதை துரைசாமி போலவே மேயர் மேம்பாட்டு நிதி குறைவாக இருப்பதைக் கேட்டு முதல்வர் ஜெயலலிதாவும் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக முதல்வர் ஜெயலலிதா, ‘’இதனை யாரும் என் கவனத்திற்கு கொண்டுவரவில்லை. சேவை செய்ய வேண்டும் என்று அதிக நிதி கேட்பதற்கு பாராட்டுகிறேன். விரைவில் நிதி உயர்த்தி வழங்கப்படும்’’ என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பிவைத்தார்.

ஜெயலலிதா நிதி உயர்த்தித் தருவதாக உறுதி அளித்ததை அதிகாரிகள் யாருமே நம்பவில்லை. ஆனால், அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் இந்த நிதியை நான்கு மடங்கு உயர்த்தி ஆண்டுக்கு 2 கோடி ரூபாயாக உயர்த்திக் கொடுத்தார். இந்த நிதியை மேயர் சைதை துரைசாமி முழுமையாக செலவழிக்கவும் செய்தார். ஐந்து ஆண்டு காலத்தில் 10 கோடி ரூபாயையும் முழுமையாக செலவழித்த ஒரே மேயர் சைதை துரைசாமி மட்டும் தான். ஏனென்றால், இவருக்கு முந்தைய மேயர்கள் 50 லட்சம் ரூபாயைக் கூட முழுமையாகச் செலவழிக்கவில்லை. அதனாலே மேயர் சைதை துரைசாமியின் நிர்வாகத் திறமையை இன்றும் அதிகாரிகள் பாராட்டிப் பேசுகிறார்கள்.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment