ஆதவ் அர்ஜுனுக்கு புரமோஷனாக பொருளாளர் பதவி..?

Image

தி.மு.க.வுக்கு திருமா பதிலடி

ஒரே நேரத்தில் நாளிதழ், ஊடகம், பத்திரிகைகள் என சகலத்திலும் விடுதலைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜுன் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று பேசி வருகிறார். நான்கு வருடங்களுக்கு முன்பு சினிமாவில் இருந்து வந்தவர் துணை முதல்வர் பதவிக்கு வரும்போது நாங்கள் ஆசைப்படக்கூடாதா என்றும் கேட்டிருக்கிறார்.

மேலும் அவர், ’’2026 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. சந்திரபாபு நாயுடு கூட்டணிக் கட்சியுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொண்டது போன்ற பெருந்தன்மை இங்கே இல்லை. வட மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் தி.மு.க.வால் ஜெயிக்கவே முடியாது. எனவே அதிகாரப்பகிர்வு அவசியம் என்று பேசிவருகிறார்.

இந்த நிலையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு குறித்து ஆ.ராசா, ‘’அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமாவளவன் கூட்டணி தர்மத்தை கண்டுகொள்ளாத நிர்வாகிகளுக்கு இடம் கொடுத்துவருகிறார். எனவே, ஆதவ் அர்ஜுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதற்கு ரவிக்குமார் எம்பி, ‘’ஆதவ் பேச்சு உண்மைக்கு புறம்பானது, அரசியல் முதிர்ச்சியற்றது. திமுகவுடன் கூட்டணி இருந்ததால் தான் இரண்டு எம்.பி நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை விசிக பெற முடிந்தது.” என்று பேசியிருக்கிறார். சிந்தனைச்செல்வனும் இதே கருத்தை வழிமொழிந்திருக்கிறார்.

அதேநேரம் திருமாவளவன் இந்த விவகாரத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை. அது மட்டுமின்றி உட்கட்சி விவகாரத்தில் தலையிட தி.மு.க.வுக்கு உரிமையில்லை என்பதை சொல்லும் வகையில் ஆதவ் அர்ஜுனுக்கு பொருளாளர் பதவி கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு திருமாவுக்கு அடுத்த இடத்தில் ஆதவ் என்ற நிலையும் கட்சிக்குள் கொண்டுவரப்படுவதாகவும் தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியை உடைப்பது மட்டுமின்றி வேறு சில திட்டங்களுடன் திருமாவும் ஆதவும் இந்த ஆட்டத்தை ஆடுவதாக தி.மு.கவினர் சந்தேகப்படுகிறார்கள்.

அதேநேரம், யார் இந்த ஆதவ் அர்ஜுன் ரெட்டியார் என்று அவரது குடும்ப சரித்திரத்தை தி.மு.கவினர் ஊடகங்களில் பரப்பிவருகின்றனர். ஆதவ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர். ஆதவ் அர்ஜுன் ரெட்டியாரின் மாமனார் “லாட்டரி” மார்ட்டின். கருணாநிதியியுடன் வர்த்தக உறவில் இருந்தவர் லாட்டரி மார்ட்டின். மேலும் கருணாநிதி கதை வசனத்தில் “இளைஞன்” என்ற திரைப்படத்தை தயாரித்தவர் லாட்டரி மார்ட்டின். மார்ட்டின் மனைவி “லீமா ரோஸ்” என்பவர் ஐஜேகே கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் மார்ட்டின் மூத்தமகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிஜேபி உறுப்பினர். மற்றொரு மகன் டைசன் மார்ட்டின். மே17 இயக்கத்துடன் தொடர்புடையவர்.

இப்படி இருந்தால் என்ன அர்த்தம்..?

Leave a Comment