ஞானகுரு :
உடம்புக்கு 8 மணி நேரம், உழைப்புக்கு 8 மணி நேரம், ஓய்வுக்கு 8 மணி நேரம் என்று பிரித்து வாழுங்கள். உடம்பு என்பது உறக்கம் மற்றும் பயிற்சி. ஓய்வு என்பது குடும்பத்துடன் இருக்கும் நேரம். இந்த மூன்றில் எது குறைந்தாலும் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்காது. பணம் கிடைக்கிறது என்பதற்காக ஓடினால் ஆரோக்கியத்திற்காக அதை விட அதிகம் செலவழிக்க வேண்டி வரலாம். ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பை 8 மணி நேரத்துக்குள் கொண்டு வாருங்கள். அதற்கு மேல் உழைப்பதற்கு எதுவும் இல்லை, தேவையும் இல்லை.
gyaanaguru.com Changed status to publish
