ஆபாசப் படத்துக்கு அடிமையாகும் சிறார்கள்..!

Image

தவறாக வழி காட்டாதீங்க மை லார்டு

பாலியல் கல்வி இல்லாத சமூகத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்பது குற்றம் இல்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருக்கும் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறது.

‘’90ஸ் கிட்ஸ்கள் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ அதேபோன்று 2கே கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகி உள்ளனர். இதற்காக அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில் இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து இதுசம்பந்தமாக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனவே, குழந்தைகள் ஆபாசப் படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரு புரட்சிகரமான தீர்ப்பு வழங்கியிருந்தார்.

ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்த  ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியானது. ’’தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பின் மூலம் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் மிக மோசமான தவறை செய்திருக்கிறார் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி பரிதிவாலா காட்டமாக விமர்சனம் வைத்திருக்கிறார்கள்.

மேலும், Child pornography என பயன்படுப்படுவதை தவிர்க்கும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் Child pornography என்ற வார்த்தைக்கு பதிலாக Child sexual and exploitative and abuse material என்ற மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ரத்து செய்திருக்கிறது.

இணையத்தின் பயன்பாடு மற்றும் செயல்பாடு பற்றி ஆனந்த் வெங்கடேஷ்க்குப் புரிதல் இல்லாத காரணத்தாலே இப்படியொரு அவப்பெயருக்கு ஆளாகியிருக்கிறார். ஒரு தனி மனிதன் தனிப்பட்ட முறையில் பார்க்கிறான் என்றால் ஒவ்வொரு தனி மனிதனும் எந்த தளத்தில் பார்க்கிறானோ அந்த தளத்தில் அதைப் போன்ற காட்சிகளை அதிகரித்துக் காட்டும் வகையிலே லாகிரதம் எழுதப்பட்டுள்ளது. எனவே, ஆர்வத்துடன் பார்க்கும் சிறார்கள் அதிலிருந்து வெளியே வராத அளவுக்கு சூழ்ச்சி செய்து முடக்கிவிடுவார்கள். இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக பாலியல் கல்வியை ஆரம்பப் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை செய்யாமல் எத்தனை சட்டங்கள் போட்டாலும் அது செல்லுபடியாகாது

Leave a Comment