Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தரவேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா கேட்பதன் பின்னணி என்ன..? – எஸ்.தர்மராஜ், வடபழனி.

195 viewsSeptember 22, 2024
0
gyaanaguru.com September 22, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 22, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 22, 2024 0 Comments

ஞானகுரு :

தி.மு.க.வில் மூன்றாவது பெரிய கட்சி என்று வேண்டுமானால் திருமாவளவனை சொல்லலாமே தவிர, தவிர்க்க முடியாத இரண்டாவது கட்சி அல்ல. எனவே துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதற்கு எந்த வரைமுறையும் தேவையில்லை. ஆனால், கேட்பதற்கு நியாயம் இருக்க வேண்டும். திராவிடக் கட்சிகள் மாநிலத்தில் ஆட்சியை யாருடனும் பகிர்வதில்லை என்று தெரிந்தும் ஆதவ் அர்ஜூனா இப்படி ஒரு கேள்வி எழுப்புகிறார் என்றால், அதற்கு பலத்த பின்னணி இருக்க வேண்டும். அதாவது விடுதலை சிறுத்தைகளுக்குள் தி.மு.க. ஆதரவு அணி, தி.மு.க. எதிர்ப்பு அணி என்று பிரிவை உண்டாக்குவது மட்டுமே ஆதவ் அர்ஜுனாவுக்கு தி.மு.க. கொடுத்திருக்கும் அசைன்மென்ட். அதனை சிறப்பாக செய்துவருகிறார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் கட்சியும் தி.மு.க. கூட்டணியில் இணைவதால் வழக்கமாகக் கிடைக்கும் சீட்டும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. இதை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து திருமாவளவன் பிரிந்துசெல்ல நினைத்தால், அவரது கட்சி இரண்டு துண்டாக்கப்படும். அதற்கான அச்சாரத்தை ஆதவ் அர்ஜுனா போட்டு வைக்கிறார். அதனால் தான், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே துணை முதல்வராகும் போது, 40 ஆண்டுக்கால அரசியல் அனுபவம்கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புவதில் தவறில்லை’ என்று தைரியமாகப் பேசுகிறார். இன்னும் அதிக எண்ணிக்கையில் சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமாவும் ஆதரவு தருகிறார். இது நீடிப்பது தி.மு.க.வுக்கே லாபம். மும்முனைப் போட்டி என்றால் திருமாவை தி.மு.க. கழட்டிவிடும். இருமுனைப் போட்டி என்றால் உடைத்துவிடும்.

 

gyaanaguru.com Changed status to publish September 22, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US