லட்டு சாப்பிட்டவங்க அசைவத்துக்கு மாறிட்டாங்க
திருப்பதியில் லட்டு தயாரிப்பில் நெய்க்கு பதிலாக மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்று வெளிவந்திருக்கும் செய்தியால், இதுவரை லட்டு சாப்பிட்ட அத்தனை சைவர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறர்கள். திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்பு பணிக்கு வைணவ பார்ப்பனர்கள் மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகும் இப்படியொரு விஷயம் நடந்திருக்கிறது என்று கிறிஸ்தவரான முந்தைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்போது லட்டு சாப்பிட்ட அத்தனை பேரும் சைவம் என்று சொல்வதா அல்லது அசைவத்தில் சேர்ந்துவிட்டார்களா என்றும் புரியாமல் விழிக்கிறார்கள்.
இதையொட்டி தனக்கு எவ்வளவு துட்டு வருகிறது என்று பார்த்த திருப்பதி ஏழுமலை வெங்கடேசன் கொஞ்சம் கிச்சன் பக்கம் போய் லட்டுவையும் பார்த்திருக்கலாம் என்று பக்தர்கள் வேதனைப்படுகிறார்கள். அதேநேரம், பால், வெண்ணெய், நெய், கொழுப்பு எல்லாமே பசுவினுடையதுதான். கோமியத்தையே குடிக்கலாம் என்றால் அதன் கொழுப்பை சாப்பிடுவதில் என்ன தப்பு என்றும் கேட்கிறார்கள்.
இது குறித்து மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, ‘’திருப்பதி லட்டை ஸ்ரீவைஷ்ணவ பார்ப்பனர்கள் மட்டும் தான் தயாரிக்க முடியும், இதுதான் பல நூற்றாண்டு பாரம்பரியம் என திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் வெளியிட்டுள்ளது. லட்டு தயாரிப்பிற்கான மூலப்பொருளை இந்த பார்ப்பனர்கள் தான் தரம் அறிந்து வாங்குகிறார்கள் என இரு மாதங்களுக்கு முன்பு கூட அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த ‘பாரம்பரிய, பரிசுத்தமான, ஆச்சாரமான, பிரம்மாவின் நெற்றியில் பிறந்த வைதீக நெறிதவறாத இருபிறப்பாளர்கள், தர்மநெறி தவறாதவர்கள், IIT-IIM கல்லூரிகளுக்கு தகுதியான அறிவாளிகள் என உலகை நம்பவைக்கிற, எங்களை தவிர மற்ற எல்லாரையும் புனிதமான கருவரைக்குள் விடமுடியுமா என ஆச்சாரத்துடன் சீற்றம்கொள்ளுகின்ற, IAS-IFS அதிகாரத்திற்கு தகுதி படைத்ததாக நம்பிக்கொள்ளுகிற, கடவுளுக்கு மட்டுமே புரிகிற சமஸ்கிருதத்தை அறிந்துவைத்திருக்கும் ஒரே மானுடனாக பூலோகத்தில் பிறந்திருக்கும் அபூர்வ உயிரிகளாக, பரமார்த்தாவோடு நேரடியாக பேசுகிற ஜீவாத்மாக்களான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வைணவ பார்ப்பனர்களை ஏமாற்றி மாட்டுக்கொழுப்பை யாரால் சேர்த்திருக்க முடியும்?
பகவான் பிரசாதத்தில் மாட்டுக்கொழுப்பை சேர்ப்பது மட்டுமல்ல, பசுமாட்டையே பிரசாதமாக்குவது ரிக், யஜீர் வேத காலத்திலேயே சொல்லப்பட்டிருக்கும் வேதநெறியை கற்றறிந்த மற்றொரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பார்ப்பனராகத்தானே இருக்கமுடியும். ரிக்வேதத்தில் என்ன சொல்றாங்கன்னா… उ॒क्षान्ना॑य व॒शान्ना॑य॒ सोम॑पृष्ठाय वे॒धसे॑ । स्तोमै॑र्विधेमा॒ग्नये॑ ॥११॥ Ref: Rigveda Mandala 8, Sukta 43, 11th Hymn அதாவது அக்னி தேவனுக்கு மாட்டினை படைத்து, சோமபானத்தை கொடுப்போம்னு சொல்லிருக்காங்க. (“Let us serve Agni with our hymns, Disposer, fed on ox and cow, Who bears the Soma on his back.”) பகவானுக்கு மாட்டுக்கொழுப்பு லட்டு மட்டுமல்ல, இன்றய சோமபாணமான டாஸ்மாக் சரக்கையும் கொடுக்கலாம்னு புரியுது.
அதேநேரம், இந்த விவகாரத்தில் திருப்பதி லட்டு சர்ச்சையில் சந்திரபாபு நாயுடு தரமிறங்கி அரசியல் செய்கிறார். இதற்கான பழியை ஜெகன் மோகன் ரெட்டி மீது மட்டுமே போடுவதும், அவர் கிருஸ்துவர் என்பதைச் சுட்டிக் காட்டி இதில் மத வெறுப்புச் சாயம் பூசுவதும் பிரச்னையை திசை திருப்புகிறார்.
திருப்பதி லட்டுக்கு இந்த நிலை என்றால் பழனி பஞ்சாமிர்தத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ..?