கொதிக்கும் காங்கிரஸ் கட்சி
மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் ஆளுநர் அவரது மாளிகை சனாதனக் கொள்கைக்கு ஏற்ப மாற்றிவருகிறார் என்று கடுமையான குற்றச்சாட்டு நிலவும் நிலையில், ராஜ்பவனில் கொலு வைபவம் நடக்க இருப்பதும், அதில் துர்கா ஸ்டாலின் கலந்துகொள்ள இருப்பதும் கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இன்று ராஜ்பவனில் இருந்து வெளியாகி இருக்கும் செய்திக்குறிப்பில், ‘வரும் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 12 வரை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த நிகழ்வைக் கொண்டாட மக்களுக்கு அனுமதி உண்டு’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘நவராத்திரி கொலுவை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைக்கிறார். தினமும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியிலும் 5 மணி முதல் 6 மணி வரை நடக்கும் கலாச்சார நிகழ்ச்சி கொண்டாட்டங்களிலும் தனிநபர் மற்றும் பள்ளி, மாணவ, மாணவியர்கள் கலந்துகொள்ளலாம். ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பம் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக 150 பேருக்க்கு அனுமதி வழங்கப்படும். இதில் வெளிநாட்டினரும் கலந்துகொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசுக்கு இது கடுமையான அவமரியாதை என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம், முதல் நாள் நிகழ்வில் பங்கேற்க துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர் கலந்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் தெரியவருகின்றன. கவர்னருக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்திவரும் காங்கிரஸ் கட்சியினரும் கூட்டணிக் கட்சியினரும் இந்த நடவடிக்கையைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்கள். கவர்னருக்கு அனுமதி கொடுக்கக்கூடாது, துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் கலந்துகொள்ளக் கூடாது என்று தி.மு.க.விடன் கோரிக்கை வைக்கிறார்கள்.
பெரியார் புகழ் பாடிக்கொண்டே சரஸ்வதி பூஜைக்கும் தேங்காய் உடைக்கும் திராவிட மாடல் செம கெத்து தான்.