• Home
  • மகிழ்ச்சி
  • நடுத்தர வர்க்கத்தினரின் பாலியல் குற்றவுணர்வு

நடுத்தர வர்க்கத்தினரின் பாலியல் குற்றவுணர்வு

Image

ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு படுக்கையறையில் கிடைப்பது சிற்றின்பம் அல்ல பேரின்பம். ஆனால், நம் நாட்டில் கிட்டத்தட்ட 95 சதவீத மக்கள் ஒன்று அல்லது இரண்டு படுக்கையறை வீடுகளில் தான் வசிக்கிறார்கள். எனவே, படுக்கையறையில் குழந்தைகளும் இருப்பதைத் தவிர்க்க இயலாமல், பாலியல் ஆசைகளை அடக்கிக்கொள்கிறார்கள்.

இதையும் தாண்டி குழந்தைகள் தூங்கிவிட்ட நம்பிக்கையில் நெருக்கம் காட்டுகையில், பிள்ளைகள் பார்த்துவிட்டால், மிகப்பெரும் குற்றவுணர்வுக்கு ஆளாகிறார்கள். இதிலிருந்து வெளியேறும் வழியை அவர்களும் அறிவதில்லை, பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்கத் தெரிவதில்லை. அதனாலே படுக்கையறை இன்பத்தை வெறுக்கிறார்கள்.

இப்படி அடக்கி வைக்கப்படும் ஆசை ஏதேனும் ஒரு வடிவில் வெடித்துக் கிளம்புகையில் அக்கம்பக்கம் பார்க்கும் குறைந்தபட்ச விழிப்பும் இருப்பதில்லை. இந்த வகையில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த துயரத்தைக் கவுன்சிலிங் பகுதியில் படிக்கத் தயாராகுங்கள்.

விரைவில் 2024 ஐப்பசி ஞானகுரு மகிழ்ச்சி இதழ்…

Leave a Comment