தலைமை நீதிபதிக்கு நறுக் சுருக் கேள்விகள்

Image

இது நியாயமான்னு சொல்லுங்க

நீதிபதிகள் அரசியலுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தலைமை நீதிபதி சந்திரசூட் வீட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பூஜை செய்தது ஜனநாயகவாதிகளை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றதும் அதை பாஜகவினரே போட்டோ மற்றும் வீடியோ எடுத்துப் பரப்பியதும் இப்போது விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. அதைப்பற்றி மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் 6 கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஒன்று: யாருடைய அழைப்பின் பேரில் பிரதமர் தலைமை நீதிபதியின் இல்லத்திற்குச் சென்றார்?

இரண்டு: குடியரசுத் தலைவர் உள்ளிட்ட மற்ற அரசியலமைப்பு நிர்வாகிகள் ஏன் வரவில்லை? அவர்கள் அழைக்கப்பட்டார்களா?

மூன்று: தலைமை நீதிபதியின் இரண்டு வருட பதவிக் காலத்தில், சமூக மற்றும்/அல்லது மத நிகழ்ச்சிகளுக்காக அவர் எத்தனை முறை பிரதமரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார்?

நான்கு: தனிப்பட்ட அந்த மதச் சடங்கு ஏன் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டது?

ஐந்து: மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், மகாராஷ்டிர சின்னமான தொப்பி அணிவதற்குத் தலைமை நீதிபதி விட்டுக் கொடுத்தாரா?

ஆறு: இந்து சின்னங்கள், பாடல்கள் மற்றும் சடங்குகளின் இந்த வெளிப்படையான காட்சிப்படுத்துதலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்து அல்லாத வழக்காடிகள் தலைமை நீதிபதியிடமிருந்து இனி பாரபட்சமற்ற நீதியை எதிர்பார்க்க முடியுமா?

இந்த ஆறு கேள்விகளுக்கும் பிரதமரும் தலைமை நீதிபதியும் பதில் சொல்லக் கடைமைப்பட்டவர்கள். இந்தக் கேள்விகள் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்குமே பொருந்தக் கூடியவை என்கிறார்.

பதில் கிடைக்குமா..?

Leave a Comment