• Home
  • அரசியல்
  • சீமான் பாணியில் விஜய்க்கு என்.ஆர்.ஐ. திரள் நிதி..?

சீமான் பாணியில் விஜய்க்கு என்.ஆர்.ஐ. திரள் நிதி..?

Image

வசூல் வேட்டை ஆரம்பமாகுமா..?

நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் அத்தனை மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் அவருக்கு ஆதரவு இருக்கிறது. அத்தனை பேரும் விஜய் கட்சி அறிவிப்பை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் வாழும் ரசிகர்களுக்காக என்.ஆர்.ஐ. பிரிவு உடனடியாக விஜய் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நிதி வசூல் செய்து நிறைய நல்ல காரியங்கள் செய்ய முடியும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

இது குறித்து விஜய் ரசிகர்கள், ‘’வெளிநாட்டில் வசிக்கும் என்.ஆர்.ஐ.களின் அரசியல் ஈடுபாடு பதவிகளையும், வாக்களிப்பதையும் தாண்டிய ஒன்று. பல முக்கிய இந்திய அரசியல் கட்சிகள் அவர்களுக்கென பிரத்யேகப் NRI பிரிவை வைத்துள்ளன. விஜய் கட்சியில் என்.ஆர்.ஐ. பிரிவை கழகம் உருவாக்கும் போது அதில் இனைந்து, தலைமையின் வழிக்காட்டுதலின், அறிவுரையின்படி NRI தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் தங்கள் பங்கைச் செய்யலாம்

என்.ஆர்.ஐ. தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள், ஏதேனும் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி மற்றும் பெரிய நெருக்கடிகளின் போது தேவையான உதவிகளை வழங்கலாம்

தமிழக வெற்றிக் கழக NRI பிரிவு, கட்சி வேட்பாளர்களுக்காக தங்கள் தொகுதிகளிலும் மாநிலத்திலும் தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்ய நேரம் ஒதுக்கலாம் தேர்தல் நேரத்தில் ஒரு பிரத்யேக ஹாட்லைன் எண்ணை (WhatsApp/Mobile) அமைக்கலாம்,

இதை, NRI பிரிவு தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களை ஒன்றிணைக்கவும் அவர்களுக்கு பிரச்சாரத் தகவல்களை வழங்கவும், கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதற்கு அவர்களின் உள்ளூர் தொகுதிகளுடன் இணைக்கவும் வழிவகுக்கலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தில் உள்ள எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதை உறுதி செய்யலாம் “எங்க நல்லது நடந்தாலும் நம்ப பசங்களாத் தான் இருக்கனும்னு” தலைவர் சொன்னது போல் வெளி நாட்டில் இருக்கும் தவெக தோழர்கள் இணைந்து, வெளி நாட்டில் இருக்கும் தமிழர்கள்/இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சணைகளுக்கு உதவிகளும் மிகச் சிறப்பாகச் செய்யலாம்.

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது, ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் NRI பிரிவு தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களின் பங்களிப்பை கட்சியின் வெற்றிக்காக நிறைவாக பயன்படுத்துவதற்கு கழகத் தலைமையின் முன்னெடிப்பிற்காக தயாராக பலரும் உள்ளோம்’’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

விஜய்க்கு பணம் கொடுக்க ஆட்கள் ரெடி. வசூல் செய்யப்போவது யாரோ..?

.

Leave a Comment