தி.மு.க. வரலாறைச் சொல்லி அடிக்கிறாங்க
விஜய் மாநாடு நடத்துவதற்கு வேண்டுமென்றே இழுத்தடித்து ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்திருப்பதாக விஜய் ரசிகர்கள் உதயநிதி மீது எக்கச்சக்க வெறுப்பில் இருக்கிறார்கள்.
அரசியலில் ஆறு மாதம் கூட விஜய் தாக்குப்பிடிக்க மாட்டார் என்று அமைச்சர் கூறியிருப்பதற்கு எதிர்வினையாக, தி.மு.க.வின் கடந்த கால வெற்றி வரலாறுகளை தூசு தட்டி போட்டிருக்கிறார்கள்.
தி.மு.க. இதுவரை எல்லா தேர்தல்களிலும் கூட்டணிக் கட்சிகள் பலத்தினாலே ஜெயித்திருக்கிறது என்கிறார்கள்.
தி.மு.க. முதன்முதலாக தேர்தலை சந்தித்த 1967 = 8 கட்சிக் கூட்டணியால் வெற்றி அடைந்தது.
1971 = 4 கட்சிக் கூட்டணியால் வெற்றி அடைந்தது.
1977 = கூட்டணி இல்லாமல் தோல்வியை சந்தித்தது.
1980 = 2 கட்சிக் கூட்டணியுடன் தோல்வி
1984 = 3 கட்சிக் கூட்டணியுடன் தோல்வி
1989 = 2 கட்சிக் கூட்டணியால் வெற்றி
1991 = 4 கட்சிக் கூட்டணி இருந்தும் தோல்வி
1996 = 4 கட்சிக் கூட்டணியுடன் வெற்றி
2001 = 15 கட்சிக் கூட்டணி வைத்தும் தோல்வி
2006 = 7 கட்சிக் கூட்டணியால் வெற்றி
2011 = 7 கட்சிக் கூட்டணியுடன் தோல்வி
2016 = 7 கட்சிக் கூட்டணியுடன் தோல்வி
2021 = 12 கட்சிக் கூட்டணியால் வெற்றி.
திமுக கூட்டணி இல்லாமல் போட்டி போட்ட ஓரே தேர்தல் 1977 மட்டுமே. அந்த தேர்தலில் தோல்வியே மிஞ்சியது. பின் கூட்டணி இல்லாமல் திமுக தேர்தலை சந்தித்ததே இல்லை. சந்திக்கும் அளவு பலமான கட்சியும் இல்லை, தைரியமும் இல்லை.
குறிப்பாக கடந்த 35 வருடங்களாக பலமான கூட்டணியோடு மட்டுமே தேர்தலை சந்தித்தது. கூட்டணி கட்சிகளால் தான் திமுக வென்றது. சின்ன சின்ன கூட்டணி கட்சிகளின் 1-10% வாக்கு சதவீதமே வெற்றியை தீர்மானிக்கிறது. ஜெயலலிதா கூட 2016-ல் கூட்டணி இல்லாமல் தனியாக நின்று வெற்றிபெற்றார். ஆனால் திமுகவிடம் பணம் அதிகாரம் எல்லாமே இருந்தும் தனித்து நிற்க முடியாத பலவீனமான கட்சி அது.
பலமான கட்சி என்றால் எதற்காக கூட்டணி தேவைப்படுகிறது? சுய நம்பிக்கை இல்லாத காரணத்தால் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி வைத்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறது திமுக. இங்கே வெற்றிக்கு கூட்டணி தேவை. வரும் தேர்தலில் விஜய்யை எதிர்கொள்ள தைரியம் இல்லாமல், ஈர்ப்பு இல்லாத நடிகர் உதயநிதியை அரசியலில் ஜெயிக்க வைக்க கூட்டணிக் கட்சிகளை கெஞ்சி, கூட்டணியில் தக்கவைத்துக் இள்ளும் பரிதாப நிலையில் தான் திமுக இருக்கிறது. 2026ல் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்