சினிமா

விஜய்க்குப் பக்கத்தில் கூட ரஜினி இல்லையே..?

பில்டப் எல்லாம் கப்ஸா

இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளவுக்கு சம்பளம் வாங்கும் நடிகர்கள் யாரும் இல்லை என்று அவரது ரசிகர்கள் அவ்வப்போது சில புள்ளிவிபரங்களை அள்ளித் தெறித்துவருவார்கள். ஆனால், வருமான வரி கட்டும் நடிகர்கள் பட்டியலில் விஜய்க்குப் பக்கத்தில் கூட ரஜினிகாந்த் இல்லை என்பது அதிர்ச்சியான தகவல்.

சமீபத்தில் வருமானவரித்துறை மூலம் வெளியான தகவல் படி, ‘’அதிகமாக வருமான வரி கட்டும் பிரபலங்களில் இந்திய அளவில் முதலிடத்தில் ஷாருக்கானும், இரண்டாம் இடத்தில் நடிகர் விஜயும் இருக்கிறார்கள்.

இந்திய அளவில் முதல் 22 இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேறு எந்த நடிகரும் இடம்பெறவில்லை. விஜய்க்கு நிகராக இல்லாவிட்டாலும் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் சம்பளம் பெறுகிற ஒரு தமிழ் நடிகர் கூடவா தமிழ்நாட்டில் இல்லை என்பது ஆச்சர்யமான தகவல்.

ஆனால், ரஜினி பற்றி சோஷியல் மீடியாவில் பரவலாக ஊதிப் பெரிதாக்கப்பட்ட தொகையைத்தான் முன்ணனி நடிகர்கள் உண்மையில் சம்பளமாக வாங்குகிறார்களா? இல்லை அவற்றை கருப்பு பணமாக வாங்கி, ஊதியத்திற்கேற்ற சட்டபூர்வமான வருமான வரியை முறையாக செலுத்தாமல் இருக்கிறார்களா? என்பதெல்லாம் கேள்வியாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில் வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இம்மாதம் இறுதி வாரத்தில் வேட்டையன் இசை வெளியீட்டு விழா நடைபெறுமாம். இதையொட்டி அவரது ரசிகர்கள் என்னவெல்லாம் கதை கட்டப் போகிறார்களோ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *