விஜய் கட்சிக்கு பா.ஜ.க. முறைப்பு..?

Image

’தல’ பஞ்சாயத்தில் அர்ச்சனா

கோட் படம் சூப்பர் ஹிட் சக்சஸாக அமையவில்லை என்றாலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியிருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் செம ஹேப்பி மூடுக்கு மாறியிருக்கிறார்கள்.

’தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில்,பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது’ என்று விஜய் கூறியிருக்கும் நிலையில், இன்னமும் மாநாட்டு நிகழ்ச்சியை முறையாக அறிவிக்கவில்லை. ஏனென்றால் மாநாட்டு விஷயங்களுக்கு தி.மு.க. முட்டுக்கட்டை போடுவதாகவும் அதை முறியடிக்கும் முயற்சிகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், விஜய்க்கு எதிராக பா.ஜ.க. திரும்பியிருப்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. அதாவது இஸ்லாமியர், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொன்ன விஜய் நேற்றைய விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என்பது வில்லங்கமாகி இருக்கிறது.

அதேபோல், ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அர்ச்சனா தல அஜித்தை மட்டம் தட்டிப் பேசியிருப்பதாகவும் கடுமையான எதிர்விளைவுகளை அஜித் ரசிகர்கள் செய்துவருகிறார்கள். தல என்றாலே அஜித் என்று அவர்கள் நினைக்கும்போது விஜய் படத்தில் தல என்றால் டோனி என்பது போல் காட்டியிருப்பது வில்லங்கத்தைக் கிளப்பியிருக்கிறது.  

இதையடுத்து, ‘பட ரிலீஸுக்கு முன்னாடி வரை அஜித் பேரை பயன்படுத்தி promotion-க்கு பிச்சையெடுத்துட்டு எல்லாம் முடிஞ்ச பிறகு ஒட்டுமொத்த Team-ம் தலய தரம்தாழ்ந்து விமர்சிக்கிறதெல்லாம் எச்ச பொழப்போட உச்சம். சண்டைக்கும் தோனிக்கும் என்ன சம்பந்தம்? அப்புறம் என்னத்துக்கு மங்காத்தா BGM? போட்டிருக்கீங்க’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Leave a Comment