• Home
  • யாக்கை
  • அதிகாலையில் மாரடைப்பு வருவது ஏன்?

அதிகாலையில் மாரடைப்பு வருவது ஏன்?

Image

மருத்துவ கண்டுபிடிப்பு

பொதுவாக வயதான நபர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் அதிகாலை 5 முதல் 6 மணிக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் நிறைய பேர் உயிர் தூக்கத்திலே பிரிவதற்கு முக்கிய காரணமாக நெக்டூரியா இருக்கிறது.

நொக்டூரியா என்றால் சிறுநீரக செயல் குறைவதால் இதயம் மற்றும் மூளைக்குச் செல்லும் ரத்தவோட்டத்தில் ஏற்படும் அடைப்பு ஆகும். இரவில் தூக்கத்தில் இருந்து விழித்து சிறுநீர் கழிக்க வேண்டிய  அவஸ்தைக்குப் பயந்து பலர் மாலை நேரத்திலிருந்தே போதிய அளவுக்குத் தண்ணீர் குடிப்பதில்லை. இப்படி தண்ணீர் குடிக்காமல் தவிர்ப்பதே உயிர் போவதற்குக் காரணமாகிறது.

தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்க மீண்டும் மீண்டும் எழுந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் தண்ணீர் சத்து குறைகிறது. அதேபோல் இரவு நேரத்தில் எழுந்து சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் குடிக்காமல் படுக்கிறார்கள்.   இதனால் வயதானவர்களுக்கு இதயத்தின் செயல்பாடு குறைகிறது. இதயத்தால் உடலின் கீழ் பகுதியில் இருந்து ரத்தத்தை உறிஞ்ச முடியாது.

இரண்டு அல்லது மூன்று முறை சிறுநீர் கழித்த பிறகு, ரத்தத்தில் மிகக் குறைந்த அளவு நீர் மட்டுமே உள்ளது. அதோடு சுவாசிப்பதன் மூலம் உடலின் நீரும் குறைகிறது.  இதனால் ரத்தம் தடிமனாகவும், ஒட்டும் தன்மையுடனும் இருப்பதால் தூக்கத்தின் போது இதயத் துடிப்பு குறைகிறது. 

தடித்த ரத்தம் மற்றும் மெதுவான ரத்த ஓட்டம் காரணமாக, குறுகலான ரத்த நாளங்கள் எளிதில் அடைக்கப்படுகின்றன. எனவே, இதயத்தின் செயல்திறனை அதிகரிக்க பகலில்  நடப்பது போன்ற உடற்பயிற்சி செய்யவும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம்.  

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்