• Home
  • அரசியல்
  • விஜய் டிக்கெட் பஞ்சாயத்துக்கு சூப்பர் சப்போர்ட்!

விஜய் டிக்கெட் பஞ்சாயத்துக்கு சூப்பர் சப்போர்ட்!

Image

கூட்டணிக்கு இப்படி அலையலாமா?

விஜய் கோட் படம் அமெரிக்காவில் எக்கச்சக்க புக்கிங், கேரளாவில் நிறைய தியேட்டர் என்றெல்லாம் அநியாயத்துக்கு புரமோஷன் வரும் நிலையில், சிறப்புக் காட்சிக்கு 2,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. நிறைய தியேட்டார்களில் அதிகாரபூர்வமாக 750 ரூபாய் டிக்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் கொள்ளையில் விஜய்க்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அரசியல் கட்சிகள் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.

ஏற்கெனவே விஜய் குறித்து கடுமையான விமர்சனம் முன்வைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ‘’படம் ரிலீசாகும்போது ரசிகர்களுக்கு இலவச டிக்கெட் கொடுக்காமல் 2 ஆயிரத்துக்கு விற்பவர்களால் நாட்டை பாதுகாக்க முடியுமா…?” என்று ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதையடுத்து விஜய்க்கு ஆதரவாக பா.ஜ.க.வினரும் அ.தி.மு.க.வினர் ஓடோடி வந்து தி.மு.க.வினரை விரட்டியடிக்கிறார்கள். ‘ஒரே ஒரு திரைப்படத்தின் பிளாக் டிக்கெட் விற்பனையை கூட தடுக்க முடியாத நீ எப்படி இந்த மாநிலத்தை பாதுகாக்க முடியும் முதலில் பதவி விலகுன்னு பதிலுக்கு சொன்னா என்ன பண்ணுவீங்க ?’ என்று பா.ஜ.க.வின் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அ.தி.மு.க.வினரும், ‘தைரியம் இருந்தா விஜய் ரிலீஸ் படத்தைத் தடுத்துப் பாருங்க. உங்களுக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை’ என்று கிண்டல் செய்கிறார்கள். அது மட்டுமின்றி, விஜய்க்கு ஆதரவாக நிற்கிறார்கள்.

அதாவது, கோட் படம் பார்ப்பதற்கு 2000 ரூபாய் தருவதற்கும் விஜய் ரசிகர்கள் தயாராக இருக்கும் நிலையில் தி.மு.க.வுக்கு என்ன கவலை. சாதாரண பட்ஜெட்டில் தயாராகும் படத்துக்கு வைக்கப்படும் அதே விலையை விஜய் படத்துக்கும் வைப்பது என்றால் எப்படி சம்பாதிக்க முடியும்’ என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.

விஜய்க்கு இப்படியெல்லாம் ஆதரவு கொடுத்தால் அவருடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கும் என்பதற்காகவே பா.ஜ.க.வும் அ.தி.மு.க..வும் அலைகின்றன என்று தி.மு.க.வினர் கிண்டல் அடிக்கிறார்கள்.

Leave a Comment