• Home
  • அரசியல்
  • கூட்டணி இல்லைன்னாலும் விஜய்க்கு ஆதரவு..!

கூட்டணி இல்லைன்னாலும் விஜய்க்கு ஆதரவு..!

Image

சீமானின் குழப்ப அரசியல்

2026 தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்று சீமான் தெளிவாக அறிவிப்பு செய்திருக்கிறார் என்றாலும், விஜய்யை ஒரு போதும் எதிர்ப்பதில்லை. ஆகவே, எப்படியாவது விஜய்யுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற ஆசையுடனே சீமான் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இடும்பாவனம் கார்த்தியின் அறிக்கையும் அமைந்திருக்கிறது.

அவரது அறிக்கையில், ‘’நடிகரும், தவெகவின் தலைவருமான விஜய் அவர்கள் தனது கட்சியினுடைய கொடிப்பாடலின் காட்சியமைப்பில் அறிஞர் அண்ணா, எம். ஜி.ஆர். போன்ற திராவிட இயக்கத்துத் தலைவர்களைத்தான் காட்டியிருக்கிறார். அண்ணா, எம்.ஜி.ஆரைக் காட்டியதோடு மட்டுமில்லாது, ஒன்றிய அரசு என்றும் விளித்திருக்கிறார்.

இத்தோடு, நீட் தேர்வை எதிர்த்து, கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டுமெனவும் கூறியிருக்கிறார். இது பாஜகவைத் தவிர்த்த தமிழ்நாட்டிலுள்ள அத்தனைக் கட்சிகளின் நிலைப்பாட்டை ஒத்ததுதான் என்றாலும், பாஜகவுக்கு எதிரான இடதுசாரி அரசியல் பாதையில்தான் விஜய் செல்ல விரும்புகிறார் என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ளலாம். மற்றபடி, அவரை விமர்சிக்கவோ, எதிர்க்கவோ ‘இப்போதைக்கு’ ஒன்றுமில்லை.

அவர் கொள்கை, கோட்பாடுகளை அறிவித்தப் பிறகுதான், மற்றவற்றை மதிப்பிடவும், கருத்துக் கூறவும் முடியும் என்பதே புறநிலை. அரசியல்படுத்தப்படா கூட்டமாக இருக்கிறார்கள்; அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆழமான அரசியல் புரிதலில்லை; கள அரசியல் செய்வதில்லை; எல்லாச் சிக்கல்களுக்கும் வாய்திறப்பதில்லை என போதாமைகளும், குறைபாடுகளும் அவர்களிடம் இருக்கவே செய்கின்றன. மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இப்போது அவர்களை எதிர்க்கிற அளவுக்கு என்ன இருக்கிறது?

தற்போதைய நிலையில், விஜய் கட்சியின் அரசியலை எதிர்க்கிற அளவுக்கு ஒன்றுமில்லை. அக்கட்சி நடத்தப் போகிற மாநாட்டுக்குப் பிறகுதான், எல்லாம் தெரியும். முன்னதாக, நாம் தமிழர் கட்சிக்கும், விஜய் கட்சிக்கும்தான் மோதல் ஏற்படுமென சிண்டு முடியப் பார்த்தது திராவிடக் கும்பல்.

2026ஆம் ஆண்டு தனித்துத்தான் போட்டி என அண்ணன் சீமான் அவர்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டப் பிறகும், போட்டியாளராக விஜய்யைக் கருதாமல் அவருக்கு வாழ்த்துகளையே தெரிவிக்கிறார்; திமுக தரப்பிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்பட்டால், அதனை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். அதேநேரம், விஜய் கட்சி ஆரம்பித்த நாள்தொட்டு, பதற்றத்தில் இருப்பது திராவிடக்கும்பல்தான்.

விஜய் அரசியல் கட்சி தொடங்குவதை வரவேற்போம்; அவரது திசைவழிப்போக்கைப் பொறுத்து வாழ்த்துவதா? எதிர்ப்பதா? என்பதை முடிவுசெய்து கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.

இதை விட நேரடியாக எப்படி விஜய்யிடம் கெஞ்ச முடியும் என்பது தான் புரியவில்லை.

Leave a Comment