ஞானகுரு :
இறந்துபோன ஒருவரைப் பற்றித் தவறாகப் பேசக்கூடாது என்பது நம் பண்பாட்டின் கேவலமான மரபு. அதனால்தான் செத்துப் போன சாமியார்கள் புனிதர்களாகவும் இப்போது இருப்பவர்கள் அயோக்கியர்களாகவும் தெரிகிறார்கள். தன்னை கடவுள் என்று சொல்பவரும், தன்னை கடவுள் போல் பூஜிக்க அனுமதிப்பவரும், கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என்று சொல்லிக்கொள்பவரும் நிச்சயம் உண்மை பேசும் நபர் இல்லை.
ஆதிசங்கரர் என்றாலும் மகா பெரியவர் என்றாலும் ஜக்கி வாசுதேவ் என்றாலும் அத்தனை பேருக்கும் பசி நிஜம், உடல் கழிவை வெளியேற்றினார்கள். நோயில் பாதிக்கபட்ட்டார்கள். இந்த சுழற்சியில் இருந்து மீறியவர்கள் மட்டுமே சாமியார்கள் என்ற இலக்கணத்தில் அடங்குவார்கள். இன்று கேவலப்படுத்தப்படும் நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்றவர்களை ஐம்பது வருடங்கள் கழித்து புனிதர்களாக போற்றப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.
gyaanaguru.com Changed status to publish
