ஞானகுரு :
மறு பிறவி இல்லாத வாழ்க்கை எது? கம்பளிப் பூச்சி பட்டாம் பூச்சியாக உருமாறுகிறது. ஒவ்வொரு மனிதனும் குழந்தையாக, மாணவனாக, காதலனாக, கணவனாக, தந்தையாக, தாத்தாவாக மாறுவதுதான் மறு பிறவி. இந்தப் பிறவி ரகசியத்தை அறிந்து அனுபவித்து வாழத் தெரியாத மனிதர்கள்தான் அடுத்த பிறவி ரகசியத்தை அறிந்துகொள்ளத் துடிப்பார்கள். இந்த பிறவியில் மகிழ்ச்சியாக வாழ முடியாதவர்களே, அடுத்த பிறவியிலாவது அப்படியொரு வாழ்வு கிடைக்குமா என்று ஏங்குகிறார்கள். இங்கு மகிழ்ச்சியாக வாழும் வழியை அறிந்துகொள்ளுங்கள், மறுபிறவியும் முற்பிறவியும் தேவையின்றி போய்விடும்.
gyaanaguru.com Changed status to publish
