சர்ச்சையாகும் பள்ளி விசிட்
எங்களுக்கு இல்வச பஸ் வேண்டும், மாதம் ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று மக்கள் கேட்டார்களா..? பிறகு எதற்கு இலவசங்களைக் கொடுத்து மக்களை அவமானப்படுத்துகிறீர்கள் என்று முதல்வர் ஸ்டாலினை நோக்கி குற்றம் சுமத்திய நாம் தமிழர் சீமானின் பள்ளி மாணவிகள் கடும் சர்ச்சையாகியுள்ளது.
இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருக்கும் ஒரு அரசு பள்ளியில்..சீமான் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்கு பிஸ்கெட், பிரட் வழங்கியிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தி.மு.க.வினர், ‘’நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் பள்ளிக் குழந்தைகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டு போக்சோ சட்டத்தில் கைதாகியது தமிழ்நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஈரம் காயும் முன்னரே.. அதே கட்சியைச் சேர்ந்த அக்யுஸ்ட்டுகளை பள்ளிக்குள் அனுமதிக்க காரணம் என்ன? அரசிடம் முறையான அனுமதி பெறப்பட்டதா? மீண்டும் ஒரு சம்பவம் நடந்தால் யார் பொறுப்பு?
சீமான் போன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளவனை எப்படி மாணவிகள் இருக்கும் பள்ளிக்குள் அனுமதிப்பது? மாணவிகள் சீமானிடம் எங்களுக்கு பிரட் வாங்கிக் கொடுங்கள், பிஸ்கெட் வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டார்களா..? சீமான் வார்டு கவுன்சிலர் கூட கிடையாது.. எந்த அதிகாரத்தை வைத்து அந்த பள்ளி நிர்வாகம் சீமானை பள்ளிக்குள் அனுமதிக்கிறார்கள்..? மாணவர்களிடம், ‘’படிக்காதீர்கள், ஆடு மாடு மேயுங்கள்” என்று பேசக்கூடிய சீமான் மாணவர்களுக்கு தவறாகவே வழி காட்டுவார். ஆகவே, பள்ளி கல்வித்துறை இதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பொங்கிவருகிறார்கள்.