முருகனுக்கு அடுத்து அம்மனுக்கு விழா
முருகனை முப்பாட்டன் என்று சீமான் கொண்டாடினார். அடுத்து வேல் யாத்திரை நடத்தி எல்.முருகன் கொண்டாடினார். இப்போது ஸ்டாலின் மாநாடு நடத்தி கொண்டாடி வருகிறார். இது தான் திராவிட மாடல் என்னவென்பதை இன்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு புரிய வைத்திருக்கிறார்.
பா.ஜ.க.வின் காலில் விழுவது என்று முடிவெடுத்துவிட்டால் டோட்டல் சரண்டர் ஆகிவிட்டார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது. திராவிட மாடல் அரசு கோயில் சொத்தை பாதுகாப்பது மட்டுமே வேலை. எனவே, தமிழ்நாடு அரசு முருகன் மாநாடு நடத்தியதே தவறு என ஆளும் திமுகவின் கூட்டணி கட்சிகள் கொந்தளிக்கின்றனர்.
“தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை என்பது கோவில் நிர்வாகத்துக்கானதே தவிர, இந்து மதத்தைப் பரப்புகிற பணிகளை செய்யக் கூடாது” என திமுகவை தொடர்ந்து ஆதரிக்கும் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆகியவையும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. * இந்த நிலையில் முருகன் மாநாட்டைத் தொடர்ந்து “அம்மன் மாநாடு” நடத்தப் போவதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
ஏங்க, அப்படின்னா பிள்ளையார், சிவன் எல்லாம் கோபப்பட மாட்டாங்களா..? அவங்களுக்கும் விழா எடுங்க என்று கிண்டல் செய்கிறார்கள்.