• Home
  • அரசியல்
  • எடப்பாடி பழனிசாமிக்கு உடம்பில் இத்தனை பிரச்னைகளா..?

எடப்பாடி பழனிசாமிக்கு உடம்பில் இத்தனை பிரச்னைகளா..?

Image

ஓய்வுக்குப் போகச் சொல்லும் உடன்பிறப்புகள்

தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் ஆஜராக வந்த எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதையடுத்து இத்தனை கஷ்டப்படும் முதியவரை எதற்காக கட்சித் தலைவராக வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறீர்கள், கட்சியை மகன் கையில் கொடுத்துவிட்டு ஓய்வுக்குப் போகச் சொல்லுங்கள் என்று உடன்பிறப்புகள் கிண்டல் செய்துவருகிறார்கள்.

கடந்த 2024 மக்களவை தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் தயாநிதிமாறன் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, ‘’தயாநிதி மாறன் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை கூட செலவு செய்யவில்லை. இதன்மூலம் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம்’’ எனப் பேசியிருந்தார்.

உடனே, தனது நற்பெயருக்கு களங்க விளைவிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்திருந்தார் தயாநிதி மாறன்.  இந்த வழக்கில் ஆஜராகுமாறு எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, எம்.பி, எம்.எல்.ஏகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேலு முன்பு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார்.

அப்போது, அவதூறு வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டை மறுப்பதாக நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். செய்தித்தாள்களில் வெளிவந்த விவரங்களின் அடிப்படையிலேயே அப்படி பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் இருந்து ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார். அதில், தனக்கு 70 வயதாகிவிட்டது, உடல்நிலை பாதிப்பு அதிகம் இருக்கிறது உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்துவருகிறேன் 70 வயது மூத்த குடிமகன் என்பதால் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விலக்கு அளிக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

Leave a Comment