முழு சங்கி உதயநிதி, அரை சங்கி ஸ்டாலின்.

Image

அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்

ராமர் கோயிலை அரசியலில் புகுத்தியதற்காக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின் இப்போது முருகன் மாநாட்டை திறந்து வைத்திருக்கிறார். அதோடு, பள்ளிகளில் கந்தசஷ்டி கவசம் பாடவும் ஏற்பாடு செய்திருப்பதால் முழு சங்கியாக மாறிவிட்டார் என்று கூட்டணிக் கட்சியினர் கொதித்து எழுந்திருக்கிறார்கள்.

கந்தசஷ்டி விழாக் காலங்களில் முருகன் கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.. எது என்ன புதிய கல்வி ? என்று கம்யூனிஸ்ட் கட்சியும் விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமாரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தி.முக.சீனியர்கள், ‘’முருகன் தமிழ்க் கடவுள், எனவே முருகன் மீதான விழா என்பது தமிழ்க் கலாச்சாரத்தின் விழா,’ என்று அமைச்சர் உதயநிதி பேசி இருக்கிறார். முருகன் தமிழ்க் கடவுளா என்பதே விவாதத்துக்குரிய விஷயம்.  ஏனென்றால்  ஸ்கந்த புராணம் எனும் சமஸ்கிருத நூலின் ஒரு பகுதியின் மொழி பெயர்ப்புதான் கந்த புராணம். கந்தன், சரவணன், சண்முகம் எல்லாமே வடமொழிச் சொற்கள்தான். இதெல்லாமே தவறு; முருகன் பண்டைய தமிழ்க் கலாச்சாரம் உருவாக்கிய கடவுள்தான்; அவரைத்தான் வேதத்தில் தத்து எடுத்துக் கொண்டார்கள் என்று ஒரு வாதத்துக்காக நம்பிக் கொண்டாலுமே கூட, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட கடவுள் பிம்பத்துக்கு செக்யூலர் அரசே மக்கள் வரிப்பணத்தில் விழா எடுப்பது என்பது சரியான செயல் அல்ல.

அதுவும் பகுத்தறிவு போற்றும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த அரசு இப்படி செய்வது கண்டனத்துக்குரியது.  முருகனுக்காக அரசு செலவில் மாநாடு எடுப்பது என்பது பண விரயம். நேர விரயம். அமெரிக்க அரசு செலவில் ‘ஸ்பைடர்மேன் மாநாடு’ என்று அங்கே நடத்தினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இதையும் பார்க்க வேண்டும்.

‘அவங்க ராமருக்கு திருவிழா நடத்தறாங்களா, நாம முருகனுக்கு மாநாடு எடுப்போம்!’ என்று இயங்குவது தவறு. அப்படியெனில் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் எனும் கேள்வி வருகிறது. திராவிட மாடலுக்கு இனிமேல் மதிப்பும் மரியாதயும் இல்லையா? தி.மு.க. கொடியில் சிவப்பை எடுத்துவிட்டு காவி வைத்துக்கொள்ளலாம். அறிவாலயம் கொத்தடைமைகளையும் இனி சீமானுடன் மட்டும் மோத வைக்கலாம்’’ என்று தி.முக. சீனியர்கள் வருந்துகிறார்கள்.

அது போல் தி.மு.க. உடன்பிறப்புகளும் ஸ்டாலின் போகும் வழியைக் கண்டு அதிர்ந்து நிற்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் முருகனுக்கு அரோகரா என்று ஸ்டாலின் பேச்சை முடிக்கும் நிலையும் வரலாம்.

Leave a Comment