• Home
  • அழகு
  • உங்க அழகுக்கு யார் பொறுப்பு?

உங்க அழகுக்கு யார் பொறுப்பு?

Image

ப்ளீஸ் ட்ரை

இந்த உலகில் அனைத்துப் பெண்களுமே அழகானவர்கள்தான். அழகில்லாதவர்கள் என்று சொல்வதை விட, தங்களை அழகுபடுத்திக் கொள்ளத் தெரியாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும் என்பார்கள். இதோ உங்களை அழகுபடுத்திக் கொள்ள சில வழிகள்…

* தலை முடி வளர:

அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த எண்ணெயை அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில் தேய்க்கு முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.

* பட்டுப்போல் தலைமுடிக்கு:

தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும். இது முடி கொட்டுவதையும் நிறுத்தும்.

* முடி கொட்டுவது நிற்க:

ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து தலை குளித்து வரவும்.

* கருவளையங்களைப் போக்க:

அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்

* பாத வெடிப்பு:

தொடர்ந்து கடுகெண்ணெயைத் தடவி வந்தால் சரியாகி விடும்.

* வழுக்கை, சொட்டை நீங்க:

தாமரைஇலைகளைப் பறித்து சாறெடுத்துக்கொள்ளவும். அதற்கு சமமான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சவும். நீர்ப்பசை நீங்கிதைலம் மேலே மிதக்கத் தொடங்கியதும் ஆறவிட்டு பத்திரப்படுத்தவும். இதை தினமும் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்கு வளரும்.

தேங்காயெணெயில் கருவேப்பிலையைப் போட்டூ நன்கு காய்ச்சி ஆரவைத்து அதை தலையில் தேய்த்து ஊறவைத்து தலை குளித்து வரலாம்.

அதை போல் உலர்ந்த நெல்லிகாயை தேங்கெண்ணெயில் போட்டு காய்ச்சி அதை ஆற வைத்து பாட்டிலில் வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம்.  தயிரை பூசி ஊறவைத்து தலைகுளிப்பதும் நல்லது.  பிரம்மி ஹெர் ஆயிலுடன் தேங்கெண்ணெயை சமமாக கலந்து தினமும் பூசுவதும் பலனை தரும்.

பொதுவாக இளநரையை ஏற்படும் காரணங்களில் முக்கியமாக டென்ஷனும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது.இவை இளநரைக்கு மட்டுமல்லாமல் உடலில் பல கோளாருகளுக்கும் இந்த டென்ஷனும் அதனால் ஏற்படும் ஸ்டிரஸ் காரணமாக உள்ளதால் கூடிய வரை டென்ஷனை தவிர்த்து வாழ்வது தான் முழு உடல் ஆரொக்கியத்திற்கும் நல்லது.

உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க தண்ணீர் நிறைய்ய குடிக்க வேண்டும். அதோடு எலுமிச்சை சாற்றுடன் கிளிசரின் அல்லது ஆலிவ் ஆயிலை சமமாக கலந்து இரவு படுக்கைக்கு போகும் முன் பூசலாம். மற்றும் வெண்ணெயை, தேங்கெண்ணெய்,

 ஆலிவ்ஆயில், மாய்சுரைசிங் கிரீம் போன்றவற்றில் ஏதாவதொன்றை ஒரு நாளைக்கு பல முறை பூசி உதட்டை உலராமல் பாதுகாக்கலாம். எச்சையால் உதட்டை ஈரப்படூத்த கூடாது, சாப் ஸ்டிக்கை அல்லது லிப் பாம் அடிக்கடி பயன்படுத்துவது மிகவும் நல்லது.

1) ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை முகத்தைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.

2) ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

3) பழங்கள், பழச்சாறு, காய்கறிகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்

4) எண்ணெய் பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும்.

5)  எலுமிச்சைச் சாறுடன் சிறிது வெந்நீர் கலந்து முகம் கழுவலாம்

6) வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து அரைத்து முகத்தில் பூசலாம்.

7) ரோஜா இதழ்களைப் பொடித்து ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசலாம்

8 சந்தனத்தையும் சீரகத்தையும் சிறிதளவு அரைத்து முகத்தில் பூசலாம்.

9) படிகாரத்தைத் தண்ணீரில் கரைத்து அந்த நீரில் சந்தனத்தை அரைத்துப் பூசலாம்.

10) சாதிக்காய் சந்தனம் மிளகு மூன்றையும் சம அளவில் அரைத்துப் பூசலாம்.

அழகு க்ரீம்:

இதுமட்டும் போதாது, முகப்பொலிவிற்கும் அழகிற்கும் தேவையான க்ரீம் ஒன்றை வீட்டிலேயே செய்து கொள்ளலாம். அதையும் பார்க்கலாமா?

தேவையான பொருள்கள்:

பாசிப்பயிறு –  100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் –  100 கிராம்

கசகசா –  10 கிராம்

உலர்ந்த ரோஜா மொட்டு –  5 கிராம்

பூலாங்கிழங்கு –  5 கிராம்

எலுமிச்சை இலை, வேப்பிலை, துளசி இலை மூன்றும் –  2 கிராம்.

 செய்முறை:

மேற்கூறிய அனைத்தையும் அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் சிறிது எடுத்து தயிரில் கலந்து முகம் கழுத்தில் தடவி வந்தால் மாசு மருவற்ற முகம் கிடைப்பதுடன் நிறமும் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும். இதை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் பயன்படுத்தலாம், அழகு பெறலாம்!

Leave a Comment