என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 113
பெருநகர் சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி இருந்த காலத்தில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஆர்வம் காட்டினார். ஆனால், மேயருக்கான மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்தது. 427 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட சென்னையின் மேயருக்கு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் என்பது பொருத்தமே இல்லாதது, போதவும் செய்யாது என்று தலைமைச் செயலக அதிகாரிகளிடம் கூடுதல் ஒதுக்கீடு குறித்து பேசினார் சைதை துரைசாமி.
அதற்கு, ‘அப்படியெல்லாம் திடீரென நிதியை அதிகரிக்க முடியாது, முதல்வரிடம் நீங்கள் பேசினாலும் கூடுதல் நிதி கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை’ என்று அதிகாரிகள் கை விரித்தார்கள்.
ஆனாலும் சைதை துரைசாமி தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை. உடனடியாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா கவனத்துக்கு நிதி உயர்வு விண்ணப்பத்தைக் கொண்டுசென்றார். சைதை துரைசாமியின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்துகொண்ட முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக மேயர் மேம்பாட்டு நிதியை 2 கோடி ரூபாய் என்று உயர்த்திக் கொடுத்தார். சைதை துரைசாமியின் கோரிக்கை உடனடியாக நிறைவேறியதைக் கண்டு அதிகாரிகளே ஆச்சர்யம் அடைந்தார்கள்.
இப்படி உயர்த்தப்பட்ட மேயர் மேம்பாட்டு நிதி 10 கோடி ரூபாயையும் மக்களுக்குச் செலவழிப்பதற்கான திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்தார். ஒவ்வொரு ரூபாயும் மிகச்சரியாக செலவு செய்யப்படுகிறதா என்பதையும் விழிப்புடன் கவனித்தார்.
இந்த நிலையில், மாநகராட்சி கேண்டீன் பற்றி ஊழியர்களின் புலம்பல் மேயர் துரைசாமி காதுக்கு வந்தது.
- நாளை பார்க்கலாம்.