என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 111
இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெற வைத்த பெருநகர சென்னை மக்களுக்கு முழுநேர சேவையாளராக உழைப்பதற்குத் தயாரான மேயர் சைதை துரைசாமி, அந்த நேரத்தில், புரட்சித்தலைவர் வழியில் ஒரு முக்கியமான முடிவு எடுத்தார்.
அதாவது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் எந்த ஒரு சொத்தும் சொந்தமாக வாங்கியதில்லை. அது மட்டுமின்றி தன்னுடைய சொந்த வீடு, சொந்த வாகனத்தையே கடைசி வரையிலும் பயன்படுத்தினார்.
புரட்சித்தலைவர் காட்டிய அதே வழியில் நேர்மை, தூய்மையுடன் தன்னுடைய மேயர் பதவியில் சேவை புரிய விரும்பினார் சைதை துரைசாமி. அதனாலே, ‘‘சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ என்று தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை தன்னுடைய மேஜையிலும், மாநகராட்சி அலுவலகங்களிலும் எழுதி வைத்தார். எழுதி வைத்தது போலவே லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் இடமில்லாமல் ஐந்தாண்டு காலமும் சேவையாற்றினார்.
அதோடு மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட கார், டிரைவர், ஊழியர்கள் போன்ற அனைத்தையும் மறுத்துவிட்டார். புரட்சித்தலைவர் வழியில் தன்னுடைய சொந்த வாகனம், சொந்த ஓட்டுநர், சொந்த செலவில் பெட்ரோல், சொந்த தொலைபேசியை மட்டுமே மேயர் காலம் முழுவதும் பயன்படுத்தினார். அது மட்டுமின்றி, மாநகராட்சி ஊழியர்கள் எவரையும் தன்னுடைய சொந்தப் பணிக்குப் பயன்படுத்தவில்லை.
அலுவலகத்திற்கு கிளம்பி வரும் ஊழியர் போன்று மாநகராட்சிக்கு வரும் போதே சுக்குமல்லி காபி, மதிய உணவு போன்றவைகளையும் சைதை துரைசாமி கொண்டுவந்து விடுவார். சைதை துரைசாமியை சந்திக்க வரும் விருந்தினர்களுக்கும் வீட்டிலிருந்து கொண்டுவந்த சுக்குமல்லி காபியையே பரிமாறினார். இந்த வகையிலும் மாநகராட்சிக்கு ஒரு ரூபாய் கூட செலவு வைக்காத மேயராக சைதை துரைசாமி இருந்தார். அதனாலே பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் சீனாவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் அரிய வாய்ப்பும் கிடைத்தது.
- நாளை பார்க்கலாம்