Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : என் ஒரே மகனின் ஜாதகம் அனுப்பி இருக்கிறேன். அவனுக்கு கிரிக்கெட், டென்னிஸ் இரண்டிலும் ஆர்வம் இருக்கிறது. எந்த விளையாட்டில் இறக்கினால் புகழும் வெற்றியும் பெறுவான்? – எஸ்.மருதீஸ்வரி, மங்களூர்

220 viewsAugust 18, 2024
0
gyaanaguru.com August 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 18, 2024 0 Comments

ஞானகுரு :

விளையாடுபவருக்கு  உடல் பலத்தைவிட மன பலம் தான் அவசியம். அதனால் உங்க குழந்தைக்கு முதலில் பரமபதம், தாயம், ஆடு புலி ஆட்டம் போன்ற விளையாட்டுக்களை அறிமுகம் செய்யுங்க்ள். தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி இருக்கும்போது ஒற்றைப் பாம்பு  தட்டிவிடலாம் என்ற உண்மை புரிய வேண்டும். தோல்வி, வெற்றி இரண்டையும் சகஜமாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை மகனுக்கு வந்ததும், தேர்வு செய்யும் பொறுப்பை அவனுக்குக் கொடுங்கள். விளையாட்டு என்பது வெற்றிக்காகவும் புகழுக்காகவும் அல்ல… அனுபவித்து விளையாடுவதற்கு மட்டுமே என்பதை புரிந்துகொள்பவரால் மட்டுமே அந்த துறையில் நுழைந்து வெற்றி பெற முடியும்.

ஜாதகக் கட்டம் என்பது ஒரு கட்டுக்கதை. ஜோதிடம் என்பது ஏமாற்று வேலை. நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதையெல்லாம் நம்பி மகனின் வாழ்க்கையை கெடுத்துவிட வேண்டாம். அவனுடைய வாழ்க்கையை அவன் முடிவு செய்யட்டும். கல்வியும் உணவும் மட்டும் கொடுங்கள். அது போதும்.

gyaanaguru.com Changed status to publish August 18, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US