Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஐயா, எனக்கு திருமணமாகி ஏழு வருடங்களாகி விட்டன. தினமும் மனைவியுடன் சண்டை நடக்கிறது. வீட்டுக்குப் போகவே வெறுப்பாக இருக்கிறது. நான் அவளை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு திருமணம் செய்வதா அல்லது சாமியாராகி விடலாமா? – சி.பரந்தாமன், திருவெறும்பூர்.

320 viewsAugust 18, 2024
0
gyaanaguru.com August 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 18, 2024 0 Comments

ஞானகுரு :

ஆணின் ரத்தத்தில் பெண்ணை அடிமையாக்கும் வெறி இருக்கிறது. பெண்ணின் ரத்தத்தில் அன்பின் மூலம் ஆணை வளைத்துப்போடும் ஆர்வம் உண்டு.  இருவரில் ஒருவர் ஜெயிக்கும் வரையிலும் அந்த வீடு ரணகளமாகவே இருக்கும். ஒருவரையொருவர் ஜெயிப்பதை விட ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதில் போராட்டம் நடந்தால் அந்த வீடு அமைதியாகிவிடும்.

விட்டுக்கொடுக்க முடியாமலும் ஜெயிக்க முடியாமல் போராடிக்கொண்டே வாழ்வது ஒரு வேதனையான காலகட்டம். எனவே, முதலில் போராட்டத்தை நிறுத்துங்கள். பூ விழுந்தாலும் தலை விழுந்தாலும் விளையாட்டு ஆரம்பிக்கவே செய்யும். எனவே, விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.  ஆனால் நீங்கள் தோற்கவும் செய்யாமல் ஜெயிக்கவும் செய்யாமல் ஏழு வருடங்களாக போராடிக்கொண்டே இருக்கிறீர்கள். இனியும் வேண்டாம், இந்த போராட்டம். சரண் அடையுங்கள். ஒரு பெண்ணை சமாளிக்க முடியாத ஒருவரால் வேறு எந்த பெண்ணையும் சமாளிக்க முடியாது. எனவே, விவாகரத்து என்பது தீர்வல்ல.

மனைவியாக வந்தவருடன் போராடியே ஜெயிக்க முடியாதவரால், வயிற்றுப்பசியுடனும் சுற்றுச்சூழலுடனும் போராட முடியாது. எனவே, சாமியார் ஆசையைத் தூக்கி குப்பையில் போடுங்கள்.

 

gyaanaguru.com Changed status to publish August 18, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US