பிசினஸ் சூத்திரம்
தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெரும்பாலான நபர்களின் முதல் சாய்ஸ் ஹோட்டல். ஏனென்றால் ஏகப்பட்ட வருமானம். அதோடு நாமும் சாப்பிட்டுக் கொள்ளலாம். நமக்கு சுவையாக சமைக்கத் தெரியும் என்பதும் பலருடைய நம்பிக்கையாக இருக்கிறது.
அதிக பணம் கையில் இல்லாதவர்கள் என்றால் ஒரு டீ கடை வைத்துவிடலாம் என்று ஆசைப்படுகிறார்கள். டீ போடுவது ரொம்பவே சுலபம் என்று நினைக்கிறார்கள். அதோடு, இப்போது நிறைய டீ கடைகள் பிரான்சிஸ் கிடைப்பதால் அதை வைத்து பணம் அள்ளிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
தொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் பணமும் ஆர்வமும் மட்டும் போதாது. ஆம், டீ, காபி, உணவுக்கு மக்கள் அலைகிறார்கள் என்பதற்காக எந்த இடத்துலயும் கடையை போட்டு சம்பாதிச்சிட முடியாது.
இப்போது tea boy, tea time, tea break என்று ஏகப்பட்ட நிறுவனங்கள் பிரான்சைஸ் தந்துட்டு போய்டுவாங்க. வாடகை, ரெண்டு பேர் சம்பளம், கரண்ட் செலவு, மூலதனம் என்றெல்லாம் மாசம் 50ஆயிரத்துக்கு மேல் வருமானம் இருந்தால் மட்டுமே டீ கடைகளில் லாபம் கிடைக்கும். தினம் 2000 ரூபாய் லாபம் வேண்டுமென்றால் 500 பேர் டீ குடிக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் டீ கடை இருக்கும் நேரத்தில் புதிதாக ஒரு கடை போட்டு 500 கஸ்டமரை தினமும் வளைப்பது சாதாரணமல்ல. எனவே எந்த காலத்திலும் பிரான்சைஸ்க்கு ஆசைப்பட்டு ஏமாந்து போகாதீங்க.
வியாபாரத்துக்கு நல்ல இடமா என்னன்னு பாத்து, உங்க பேர்லயே உங்களுக்குத் தெரிந்த சிறப்பம்சத்தை முன்னிறுத்தி ஒரு சிறிய ஹோட்டல் அல்லது டீ கடை தொடங்குங்கள்.
பிசினஸ் ஆரம்பிக்கும் போது இருக்குற ஆர்வமும் தைரியமும், பிசினஸ் சரியா போகலன்னு ஆறு மாசத்துலயே தெரியும் போது அதை இடம் மாத்தவோ, கைவிடவோ செய்யவும் தைரியம் இருக்கனும்.
நாலு பேர் என்ன நினைப்பாங்க, பிசினஸ் லாஸ் ஆகிருச்சே இப்படியெல்லாம் தயங்கிட்டு இருந்தா கண்ணை முடி திறக்குறதுக்குள்ள குழிக்குள்ள விழ வேண்டியிருக்கும். அப்புறம் மீள்வது கடினம். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும். பிசினஸ்ல இது ரொம்ப முக்கியம்.
எந்த ஒரு பிசினஸ் என்றாலும் அந்த தொழிலில் கொஞ்சம் அனுபவம் சம்பாதியுங்கள். உங்கள் தொழிலுக்கு வரவேற்பு எப்படியிருக்கும் என்று ஆய்வுகள் மேற்கொள்ளுங்கள். அதன் பிறகு தைரியமாக பிசினஸ் தொடங்குங்கள். எதிர்பாராமல் வரும் சிக்கல்களை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
பயப்படாமல் தொடர்ந்து பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு முன்னேறியவர்களே வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
பணம் சம்பாதிக்கத் தொடங்குவதே கஷ்டம். கொஞ்சம் சம்பாதிக்கத் தெரிந்துவிட்டால் பண மழை பொழியும்.