சீமான் சமாதானத்தைத் தடுக்கிறாரா கயல்விழி.?
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை பொறுப்பாளர் காளியம்மாளின் பிறந்த நாளுக்கு சீமான் பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிறகும் அவர்களுக்குள் சமாதானம் ஏற்படவில்லை என்று தம்பிகள் வருத்தப்படுகிறார்கள்.
காளியம்மாளை பிசிறு என்று சீமான் பேசிய ஆடியோ விவகாரம் படு வைரலானது. இந்த ஆடியோ குறித்து சாட்டை துரைமுருகன், சீமான் ஆகியோர் பேசிவிட்ட பிறகும் காளியம்மாள் தரப்பில் இருந்து எதுவும் வரவில்லை. சமீபத்தில் நாம் தமிழர் பிரமாண்டமாக நடத்திய பழங்குடியினர் பாதுகாப்பு மேடையிலும் சென்னையில் நடந்த சீமான் கூட்டத்திலும் காளியம்மாள் கலந்து கொள்ளவில்லை.
சீமான் சமாதானம் பேச வேண்டும் என்று காளியம்மாள் காத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் சீமான் இறங்கிப் போவதாகத் தெரியவில்லை என்றே சொல்லப்படுகிறது.
எனவே காளியம்மாளுக்கு தங்கள் கட்சிக்கு இழுப்பதற்கு மூன்று கட்சிகள் போட்டி போடுகின்றன. ராஜீவ்காந்தி மூலம் தி.மு.க.வுக்கு இழுப்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன. அதேபோல் பா.ஜ.க.வினர் வழக்கம் போல் தூண்டில் போட்டு வருகிறார்கள்.
அதேநேரம், காளியம்மாள் அ.தி.மு.க.வுக்குப் போனால் பிரச்னை இல்லை என்று சீமான் நினைக்கிறாராம். ஏனென்றால் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்குப் போனால் சீமானை எதிர்த்துப் பேச வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், அ.தி.மு.க.வுக்குப் போனால் எப்போதும் போல் தி.மு.க.வை மட்டும் எதிர்த்துப் பேசினால் போதும். தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகாது என்று சீமான் நினைக்கிறார்.
ஆனால், நாம் தமிழர் தம்பிகளோ, எப்படியாவது சீமானும் காளியம்மாளும் சமாதானம் ஆக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது கயல்விழியின் கையில் இருக்கிறதாம். அவர் தான் காளியம்மாளை கட்சிக்குள் மீண்டும் இழுப்பதற்குத் தடை போடுகிறாராம். காளியம்மாள் வாய் திறந்து பேசுவார் என்று அத்தனை பேரும் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள்.