என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 103
மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் கட்டப்பட்ட புரட்சித்தலைவி அம்மா இலவச திருமண மண்டபத்தை திறந்து வைத்தது மட்டுமின்றி, சைதை துரைசாமி மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக சிறப்புரை ஆற்றினார். .
விழாவை முடித்துவிட்டு காரில் ஏறிய புரட்சித்தலைவி சைதை துரைசாமியிடம், ‘’நான் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் இந்த கல்யாண மண்டபத் திறப்பு விழா முக்கியமானது…’’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்லிவிட்டுச் சென்றார்.
ஜெயலலிதாவின் நெகிழ்ச்சிக்குக் காரணம், அவரது பெயரில் தொடங்கப்பட்ட முதல் திட்டம் என்பது தான். அது வரையிலும் ஜெயலலிதா பெயரில் யாரும் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றியதில்லை. மேலும், ஜெயலலிதா அப்போது முதல்வராக பதவியில் இல்லை. அந்த தருணத்தில் விழா நடந்த காரணத்தாலே மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
அதோடு, ஜெயலலிதா பெயரில் உருவாக்கப்பட்ட இலவச திருமண மண்டபத்தை இடிப்பதற்கு உத்தரவிட்ட சென்னை மாநகராட்சிக்கு சைதை துரைசாமியை மேயராக்க வேண்டும் என்ற எண்ணம் புரட்சித்தலைவிக்கு அப்போதே தோன்றிவிட்டது. அதனால் தான் மேயர் தேர்தலுக்கு அறிவிப்பு வந்ததும் மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த பெயர் பட்டியலைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், முழு நம்பிக்கையுடன் சைதை துரைசாமிக்கு வாய்ப்புக் கொடுத்தார்.
ஜெயலலிதா கொடுத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி, மேயர் வரலாற்றில் இதுவரை யாரும் சாதிக்க முடியாத அளவுக்கு மிகப்பெரும் வெற்றியை சைதை துரைசாமி பெற்றார். பெருநகரச் சென்னையாக மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முதலாக 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் என்பதால் பெருநகரச் சென்னையின் முதல் மேயர் என்ற பெருமை சைதை துரைசாமிக்குக் கிடைத்தது. அது வரையிலும் 174 சதுர கிலோமீட்டராக இருந்த சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்திருந்தது. இதில் 5 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 24 சட்டமன்றத் தொகுதிகளின் புறநகர் தவிர்த்த பெரும்பாலான பகுதிகள் அடங்கியிருந்தன. இந்த மேயர் தேர்தலில் சைதை துரைசாமியின் வெற்றியில் ஏராளமான சிறப்புகள் உள்ளன. அவற்றை விரிவாகவே பார்க்கலாம்.
- நாளை பார்க்கலாம்.