Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : இளையராஜாவின் இசை இனிக்கிறது. ஆனால், அவரது பேச்சு சகிக்க முடியவில்லையே..? – ஆர்.மணிகண்டன், நீலகிரி

348 viewsAugust 10, 2024
0
gyaanaguru.com August 10, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 10, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 10, 2024 0 Comments

ஞானகுரு :

உணவகத்தில் விதவிதமான உணவுகள் கிடைக்கும், அங்கு ஆடைகள் விற்கப்படவில்லை என்று புகார் சொல்வதே அபத்தம். அப்படித் தான் இளையராஜாவின் இசை மீது விருப்பம் கொண்டே அவரை மதிக்கிறீர்கள். அவர் மீதான மரியாதையால் இசையை ரசிக்கவில்லை.

அவர் தலைக்கனத்துடன் பேசுகிறார் என்பதெல்லாம் அபத்தம். ஏனென்றால் அவருக்கு இசைக்க மட்டுமே தெரியும். அவர் பேச்சாளர் இல்லை என்பதால் அனைவரையும் கவரும் வகையில் அவருக்குப் பேசத் தெரிவதில்லை. அது குற்றமோ, குறையோ இல்லை.

அவர் சமீபத்தில், ‘என்னிடமிருந்து இன்னமும் மிகச்சிறந்த இசை வெளிவரவில்லை’ என்று ஆதங்கப்படும் வகையில் பேசியிருக்கிறார். அவர் பேசியது இது தான். ‘உண்மையில் என்கிட்ட வேலை வாங்குறதுக்கு இங்க ஆளே இல்ல. என்கிட்ட வேலை வாங்கிட்டோம்னு ஒருத்தன் நினைச்சான்னா, அது அவனுக்கு, அன்றைக்கு கிடைச்சதுதானே அன்றி, அதை வைத்துக்கொண்டு, இவருக்கு இசையில் இதுதான் வரும், இது வராது எனறு சொல்லமுடியாது. எவரொருவராலும், என்னிடம் என்ன இசை வெளிப்படும் என்பதை கணக்கிடவே முடியாது…’ என்று பேசியிருக்கிறார்.

இந்த பேச்சு தலைக்கனத்துடன் பேசுவது போல் தெரிந்தாலும், ஆழ்ந்து கேட்கும்போது, இன்னமும் தன்னிடமிருந்து மிகச்சிறந்த இசை வெளிப்படவில்லை என்ற ஏக்கம் இருப்பது தெரியும். அவர் இப்போது இசையாகவே மாறியிருக்கிறார்.. அவர் விருப்பப்படி இசைக்கிறார், அவர் விருப்படி பேசுவார். எனவே அவரது இசையைக் கேளுங்கள், ரசியுங்கள். அவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள். அவ்வளவு தான்

gyaanaguru.com Changed status to publish August 10, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • குழந்தை வளர்ப்பு
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • மாணவர்கள்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US