பிரபலங்கள்

நடிகர் மாதவன் 21 நாளில் சக்சஸ்

புதுசா ஒரு டயட்

ராக்கெட்ரி படத்திற்காக குண்டு உடலும் தொப்பையுமாக இருந்த நடிகர் மாதவன், வெறுமனே 21 நாளில் அவருடைய தேவையற்ற உடல் எடையைக் குறைத்து 54 வயதில் 24 வயது இளைஞன் தோற்றத்துக்கு மாறிவிட்டார்.

இது எப்படி சாத்தியமானது..?

நடிகர் மாதவன் இது குறித்து, ‘’என்னுடைய உடலுக்கு என்ன உணவு வேண்டுமோ அதை மட்டுமே எடுத்துக்கொண்டு 21 நாளில் என்னுடைய எடையைக் குறைத்துவிட்டேன். இதற்காக நான் எக்சர்சைஸ் எதுவும் செய்யவில்லை, மருந்து எதுவும் சாப்பிடவில்லை, உடல் எடைக் குறைப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துகொள்ளவில்லை.

வெறுமனே டயட் மூலம் அதாவது இன்டர்மிட்டன்ட் டயட்டை மட்டுமே பின்பற்றி உடல் எடையைக் குறைத்திருக்கிறேன். அதாவது 8 மணி நேரத்திற்கு மட்டுமே உணவு எடுத்துக்கொண்டு 16 மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது என்பதே இன்டர்மிட்டன்ட் டயட்.

மாலை 6:45 மணிக்குள் எனது சாப்பாட்டை முடித்துக்கொள்வேன். பதப்படுத்தப்பட்ட எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை. ஒவ்வொரு வாய் உணவையும் 45 முதல் 60 தடவை மென்று சாப்பிட்டேன். அதாவது உணவை தண்ணீராக மாறும் வரை மென்று சாப்பிட்டு, தண்ணீரை நன்றாக மென்று குடித்தேன்.

அதிகாலையில் எழுந்து நீண்ட தூரம் நடந்து செல்வதையும் இரவு சீக்கிரமாக தூங்குவதையும் பழக்கமாக்கிக் கொண்டேன். படுக்கச் செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு எலக்ட்ரிக் ஸ்க்ரீன் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். உடல் குறைக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் கொண்டு தீவிரமாக செயல்பட்டு 21 நாளில் தேவையற்ற உடல் எடையைக் குறைத்துவிட்டேன்’’ என்கிறார்.

உடல் எடையைக் குறைப்பதற்கு நல்ல டயட் என்றாலும் நீரிழிவு நோயாளிகள், சிறுநீரகம் மற்றும் குடல் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், கர்ப்பிணிகள் இதனை பின்பற்றக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *