ஞானகுரு :
எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலே ஏமாற்றம் இருக்கத்தான் செய்யும். அனுபவம் என்பது வேறு… அனுபவித்தல் என்பது வேறு. ஒரு இடத்திற்குச் செல்லும் முன்பு அதுபற்றிய கற்பனையில் திளைக்கிறீர்கள். அதுவே உங்களுடைய சிக்கல்.
எப்போதும் கற்பனையை விட நிஜம் குறைவாகவே இருக்கும் என்பதால் குறைவாகவே சந்தோஷம் கிடைக்கும். ஏனென்றால், கற்பனைக்கு எல்லைகளே கிடையாது. தாஜ்மஹால் வான் அளவுக்கு உயரமாக… வெள்ளை வெளேர் என்று சுத்தமாக… தெய்வீக அமைதியுடன் திகழ்வதாக நினைத்திருப்பாய். ஆனால், நேரில் பார்க்கும்போது கசகசவென மக்கள் கூட்டத்துடன், ஆங்காங்கே குப்பை கூளங்களுடன் பார்க்கும்போது, கற்பனையில் கிடைத்த சந்தோஷம் முற்றிலும் சிதைகிறது. உண்மையில் ஒன்றை அனுபவிக்க வேண்டும் என்றால் எவ்வித முன்முடிவுகளும் இல்லாமல், நேரடியாக அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். எல்லாவற்றையும் புதிதாகக் காணுங்கள்.