ஞானகுரு :
கடவுளுக்கு வேறு வேலையே இல்லை என்பதால் தினமும் உங்களுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா..? ஒரு செடியில் பல கத்திரிக்காய்கள் காய்க்கிறது. அது அந்த செடிக்குப் பாரமாக இருக்குமா..? இல்லவே இல்லை. அந்த செடி எவ்வளவு சுமக்க முடியுமோ, அந்த அளவுக்கே காய்க்கிறது. அதுபோலவே, உங்களால் சுமக்க முடியும் அளவுக்குத்தான் சோதனைகள் வரும். உங்களால் அவற்றை எல்லாம் சமாளிக்க முடியும் என்பதுதான் உண்மை. இனி, சோதனைகளை எதிர்கொள்வதும், ஒளிந்துகொள்வதும் உங்கள் விருப்பம்.
gyaanaguru.com Changed status to publish
