ஞானகுரு :
தினமும் விருந்து சாப்பாடு கிடைத்தால் சில நாட்களில் அதுவும் எரிச்சலாகத் தான் இருக்கும். பிடித்தமான பணி என்றால் நீங்கள் வேலை பார்க்கவேண்டிய அவசியமே இராது. ஆம், அதுவே உங்கள் பொழுதுபோக்காகவும் சந்தோஷமாகவும் அமைந்துவிடும். அதனால்தான் விஞ்ஞானிகளால் உண்ணாமல், உறங்காமல் பல நாட்கள் ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்க முடிகிறது. ஆகவே இதே வேலையை உங்களுக்குப் பிடித்தமானதாக மாற்றுங்கள். பலருக்கு உதவி செய்யும் வகையிலும், நிறைய பாராட்டுகள் கிடைக்கும் வகையிலும் நிச்சயம் மாற்றிக்கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்கள். வழி கிடைக்கும்.
gyaanaguru.com Changed status to publish
