• Home
  • அரசியல்
  • விருதுநகர் நிர்வாகிகளுக்கு ரெய்டு விட்ட உதயநிதி.

விருதுநகர் நிர்வாகிகளுக்கு ரெய்டு விட்ட உதயநிதி.

Image

நல்லாவே நடிக்கிறார்

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே கடுமையான போட்டி நிலவியது. அதில் யாரும் எதிர்பார்க்காத விருதுநகர் ஒன்று.

இங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக் தாகூர், பா.ஜ.க. கூட்டணியில் ராதிகா சரத்குமார் மற்றும் தே.மு.தி.க.வின் சார்பில் விஜயபிரபாகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டார்கள். கடைசி நொடி வரையிலும் பரபரப்பு நிலவி, சிறிய வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி பெற்றது.

இந்த தோல்வியில் தில்லுமுல்லு நடந்திருக்கிறது என்று பிரேமலதா புகார் சொல்லி தி.மு.க.வை அவமானப்படுத்தினார். இந்த நிலையில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்காக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி விருதுநகருக்கும் வருகை தந்தார்.

இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு கடுமையாக டோஸ் விழுந்திருக்கிறது. ஏரியாவில் போட்டி கடுமையாக இருக்கும் என்று கூட தலைமைக்குத் தெரிவிக்க உங்களுக்குத் தெரியவில்லை என்றால், உங்களை நம்பி எப்படி சட்டமன்றத் தேர்தலை ஒப்படைக்க முடியும் என்று எகிறியிருக்கிறார். இதையடுத்து சில நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், உதயநிதி வெளியே பேசுகையில் மிகவும் திருப்திகரமான மீட்டிங் என்று கூறியிருக்கிறார். அவரது அறிக்கையில், ‘’விருதுநகர் தெற்கு மற்றும் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் துணை அமைப்பாளர்களின் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். வருகை தந்திருந்த அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களை, தனித்தனியாக சந்தித்து அவரவர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இளைஞரணி பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தோம்.

தலைமைக்கழகம் வழங்கும் பணிகள் – இளைஞரணி சார்பிலான பணிகள் போன்றவாற்றை களத்தில் செயலாக்குவது – நீட் விலக்கு போராட்டங்கள் – நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு பங்களிப்பு செய்தது – கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு நூலகங்களை திறந்தது – இளைஞரணி மாநில மாநாட்டின் வெற்றிக்கு உழைத்தது – கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டிக்கான ஏற்பாடு – இல்லந்தோறும் இளைஞரணி முன்னெடுப்பு போன்றவற்றைக் குறித்து கேள்விகளை எழுப்பி, ஆலோசனைகளை வழங்கினோம். தங்களுடைய பணிக்கு சாட்சியாக அவர்கள், கொண்டு வந்திருந்த மினிட் புத்தகம் – புகைப்படத் தொகுப்பு – செய்திக்குறிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து வாழ்த்தினோம்…’’ என்று கூறியிருக்கிறார்.

இங்கே எல்லாம் நல்லாத்தான் நடிக்கிறார் உதயநிதி.

Leave a Comment