தமிழுக்கு அவமானம் என எதிர்ப்பு
யோகிபாபு நடிப்பில் வெளிவரும் போட் படம் குறித்து நாம் தமிழர் சீமான் பாராட்டுக்கு கடும் எதிர்ப்புகள் வருகின்றன.
போட் படம் குறித்து சீமான், ‘’பிரபா பிரேம்குமார் மற்றும் கலைவாணி ஆகியோர் தயாரிப்பில் அன்புத்தம்பி சிம்புதேவன் இயக்கியுள்ள ‘போட்’ திரைப்படத்தைச் சிறப்புக்காட்சியில் கண்டு களித்தேன். ஒரு சிறிய பெட்டிக்குள் விலைமதிக்க முடியாத புதையலை வைத்ததுபோலச் சிறிய படகு பயணத்திற்குள் ஏராளமான செய்திகளைச் சொல்லியுள்ளார் தம்பி சிம்புதேவன்.
விறுவிறுப்பான திரைக்கதையும், அழுத்தமான வசனங்களும் 80 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திற்கே நம்மை அழைத்துச்செல்கிறது. மீனவ மக்களின் கடினமான வாழ்க்கையையும், கடக்க முடியா வலியையும் நம் கண்முன் காட்சிகளாக விரியச்செய்யும் கனமான கலைப்படைப்பு இத்திரைப்படம். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இயல்பான நடிப்பின் மூலம் மீனவராகவே வாழ்ந்து காட்டியுள்ள அன்புத்தம்பி யோகிபாபுவிற்கு என்னுடைய பாராட்டுகள். அண்ணன் சின்னி ஜெயந்த், அண்ணன் எம் எஸ் பாஸ்கர், அக்ஷத் தாஸ், மதுமிதா, கௌரிகிஷன் , சாரா, சாம்ஸ் ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க நடிப்புப் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. தம்பி மாதேஷ் மாணிக்கத்தின் மிகச்சிறப்பான ஒளிப்பதிவு படகோடு நம்மைப் பயணிக்க வைத்து, இறுதிக்காட்சி நெருங்க நெருங்க பதட்டமும், பரபரப்பும் தொற்றிக்கொள்ளுமளவுக்குப் படத்தோடு ஒன்றச்செய்கிறது.
தென்றல் தீண்டுவதுபோன்ற தம்பி ஜிப்ரானின் இசை மனதை இனிதாக்குகிறது. வழக்கமான திரைப்படங்கள் போல அல்லாமல், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, அறை எண் 305இல் கடவுள் போன்று மீண்டுமொரு தனித்துவமான உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் வியக்கவைத்துள்ளார் தம்பி சிம்புதேவன். கடலும் படகும் அதில் பயணிக்கும் சில மனிதர்களும் எனும் குறுகிய வட்டத்திற்குள் சிறிதும் சலிப்புத் தட்டாமல் இரண்டு மணி நேரம் கதைக்களத்திற்குள்ளேயே கட்டிப்போட்டுள்ள தம்பி சிம்புதேவனின் கலைத்திறமைக்கு வாழ்த்துகள்”’ என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் சீமான் இந்த படத்தைப் புரமோஷன் செய்வதற்காக 5 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார் என்று ஒரு கும்பல் செய்தி பரப்பிவருகிறார்கள்.
அதேநேரம் நாம் தமிழர் தம்பிகள் சிலர், ‘’தமிழில் பெயர் வைக்காத போட் படத்துக்கு அண்ணன் எப்படி இப்படி விளம்பரம் கொடுக்கலாம். மேடையில் கண்டித்திருக்க வேண்டாமா?’’ என்றெல்லாம் குரல் கொடுக்கிறார்கள்.
சீமானை நிம்மதியா ஒரு படம் பார்க்க விட மாட்டேங்கிறாங்களே.